தினமணி கதிர்

சிரி... சிரி...

DIN

""அந்த டேபிள்ல உட்கார்ந்திருக்கிற ஜோடி லூஸா இருக்கும் போல''
""ஏன் அப்படிச் சொல்ற?''
""முதல்ல  1 -  செட் தோசை  வாங்கி ஆளுக்கு ஒண்ணு சாப்பிட்டாங்க ; மறுபடியும் 1-செட் தோசைக்கு ஆர்டர் பண்ணி, தலா 1  சாப்பிட றாங்களே!"

-வி. ரேவதி,
தஞ்சை.

""ஹோம்லி மீல்ஸ்ன்னு அந்த ஹோட்டல்ல போட்டிருந்தத நம்பி சாப்பிடப்போனது தப்பா போச்சு'' 
""ஏங்க என்ன ஆச்சு?''
""சாம்பார்ல உப்பு 
கம்மியா இருக்குன்னு சொன்னதும் ஒரு பொண்ணு  வந்து நீங்க வெட்டி 
முறிக்கறதுக்கு இது போதும்னு சொல்லி கொமட்டுல குத்திட்டு போறா''

ஆர்.சுந்தரராஜன், 
சிதம்பரம்.

""தலைவர் பேசின மேடை சரிந்து  விழுந்து நொறுங்கிப் போச்சாமே?''
""இவ்வளவு சத்தமா, ஆக்ரோஷமா பேசினா மேடை சரியாமல் என்ன செய்யும்?''
""சாதாரண ஃபீவரா இருந்தது ஒரே நாள்ல வைரல் ஃபீவரா  ஆயிடிச்சு ''
""எப்படி''
""வாட்சப்  மூலமாத்தான்''


""தூக்கத்துல என் புருசன் "மயிலே... குயிலே!'ன்னு கவித்துவமா ஏதேதோ பேசறாரு டீ''
"" உன்னைச் சொல்லியிருக்க மாட்டாரு, கவலைப்படாதே''


""யாருப்பா நீ... எங்க வீட்டுல வந்து ஒளிஞ்சுக்கிட்டு, உன்னை துரத்திக்கிட்டு வர்றவன் கிட்ட ""1000 ரூபாய் கொடுத்து அனுப்பச் சொல்றே?''
""கடனை திருப்பித் தரலைன்னு என்னை கொல்ல வர்றான் சார்! நீங்க அந்த பணத்தை கொடுத்து அனுப்பாட்டி எனக்கு அடைக்கலம் கொடுத்த உங்களையும் போட்டுத் தள்ளிடுவான் சார்!''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT