தினமணி கதிர்

பேல்பூரி

DIN

கண்டது

(உடுமலை அருகே ஓர் கிராமத்தின் பெயர்)

குரல் குட்டை

நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
 

(கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் ஓர் உணவகத்தின் பெயர்)

அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்

எஸ்.டேனியல் ஜூலியட்,
தாதன்குளம்.

(வேதாரண்யம் பகுதியில் இரு சக்கர வாகனம் ஒன்றில்)

வனத்தை பயிர்செய் வாழ்வதற்கு

-எஸ். சுதாகரன்,
வானவன் மகாதேவி.

கேட்டது


(திருச்சி - செந்தண்ணீர்புரம் செல்லும் டவுன்பஸ்ஸில் கண்டக்டரும் பயணியும்)

""என்னய்யா இது.. ஒரு பஸ்ஸூக்குள்ள 70பேர் இருக்கீங்க? சமூக இடைவெளி விட்டுநில்லுங்கய்யா''
""அப்படினா டாப்லயும், டயர்லயும் தான் தொத்திக்கிட்டு தான் வரணும்!''
""அடுத்த ஸ்டாப்புல பஸ்ûஸ நிறுத்துறேன். நீ தொத்திக்கிட்டு வா''

-சிவம், திருச்சி


(சிதம்பரம் ஆசிரியர் நகரில் ஒரு காய்கறிக் கடையில்)

""இலவசத்த எப்படி ஒழிச்சோம் பாத்திங்களா?''
"" எங்கடா ஒழிச்சீங்க ?''
""இலவசமாககுடுத்த
கறிவேப்பிலை, இப்போ 150 ரூபாய்... எப்படி?''

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்-1.


யோசிக்கிறாங்கப்பா!


"என்னை ஏன்னு கேட்க ஆளே இல்லை' என்ற வாக்கியம் வயதுக்கு ஏற்ப மாறும்.
இளமையில் கர்வமாக, முதுமையில் பரிதாபமாக.

பழனி, தருமபுரி.


மைக்ரோ கதை

நானும் என் மனைவியும் கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வரும் அந்த தம்பதியைப் பார்த்தேன். கணவர் நான்கு அடி உயரம் தான். ஆனால் மனைவியின் உயரமோ ஐந்தரை அடி இருக்கும்.

இப்படி பொது இடத்தில் உயரம் குறைவான கணவனுடன் கொஞ்சம் கூட அதைப் பற்றி நினைக்காமல் எப்படி அந்த நெட்டைப் பெண்ணால் உலா வர முடிகிறது? எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எதிரே வந்த அந்தப் பெண்ணின் முகத்தில் அது பற்றிய எந்த உணர்வும் தென்படவில்லை. மகிழ்ச்சியாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

என் அருகில் அவர்கள் வந்துவிட்டார்கள். நான் அவர்களை வினோதமாகப் பார்ப்பதை என் அருகில் வந்த என் மனைவி கவனித்துவிட்டாள்.

அவர்கள் இருவரும் எங்களைக் கடந்து சென்றுவிட்டார்கள்.

அதே எண்ணத்துடன், நாங்கள் செல்ல வேண்டிய வணிக வளாகத்துக்குள் நுழைந்தோம்.

எதிரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் நானும் என் மனைவியும் உள்ளே நுழைந்தது தெரிந்தது.

நான் 6 அடி உயரம். என் மனைவி 4 அடி உயரம். எங்கள் உருவங்கள் பளிச்சென்று கண்ணில் பட்டன.

திடீரென என் முகத்தில் தென்பட்ட உணர்ச்சி மாறுதலைக் கவனித்த என் மனைவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

-கு.அருணாசலம்,
தென்காசி.


எஸ்.எம்.எஸ்.

"மேலே பறக்க காற்று வீசாதோ' என
தரையில் தவம் கிடக்கிறது, குப்பை.

- ஏ. நாகராஜன்
பம்மல்.


அப்படீங்களா!


ஆடு, மாடு வளர்ப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்று, ஆடு, மாடுகள் நோய்வாய்ப்படுவது. மனிதர்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், அவர்களால் அதைப் பிறரிடம் சொல்ல முடியும். வாயில்லா உயிர்களாகிய ஆடு, மாடுகள் எதுவும் சொல்ல முடியாது. இதனால் ஒரு மாட்டிற்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், அது பிற மாடுகளுக்கும் தொற்றிக் கொள்ளும் அபாயம் உண்டு.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக ஜெர்மனியில் உள்ள "ஃபியூச்சரோ ஃபார்மிங்' என்ற நிறுவனம், ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவியை ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் கொட்டகையில் பொருத்திவிட வேண்டும். இந்தக் கருவியில் உள்ள சென்சார் ஒவ்வொரு கால்நடையின் அன்றாட நடவடிக்கைகளை இடைவிடாமல் பதிவு செய்து கொண்டே இருக்கும். வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து ஏதேனும் மாறுபாடு தெரிந்தால், அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நோய் அறிகுறி வெளிப்படையாகத் தெரிவதற்கு 3 நாள்களுக்கு முன்பே நோய் இருப்பதைக் கண்டுபிடித்துவிடும்.

இந்தத் தகவல் உடனே "ஃபியூச்சரோ ஃபார்மிங்' சர்வருக்குச் சென்றுவிடும். அதன் பிறகு, அங்கிருந்து நோய் குறித்த தகவல் ஆடு, மாடுகளை வளர்ப்பவரின் செல்லிடப் பேசிக்கு அனுப்பப்பட்டுவிடும். இதனால் நோயால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளை உடனே கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லமுடியும்.

இந்த ஆண்டுக்கான "அனிமல் வெல்பர் அவார்ட் மற்றும் வெள்ளிப் பதக்கம்' ஜெர்மனியில் "ஈரோ டைய்யர்' நிறுவனத்தால் இந்தக் கருவிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT