தினமணி கதிர்

திரைக்கதிர்

6th Jun 2021 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

"இரும்புத்திரை', "ஹீரோ' ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி.  "சர்தார்' எனத் தலைப்புச் சூட்டியிருக்கிறார்கள். "சிறுத்தை' படத்துக்குப் பிறகு கார்த்தி இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல். இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறாராம் இயக்குநர். அந்தக் கதாபாத்திரத்துக்கு  "கர்ணன்' படத்தில் அறிமுகமான ரஜிஷா விஜயனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இன்னொரு கதாநாயகி ராஷி கண்ணா.

--------------------------------------------------------------------------------------------------------------

"நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்  மெஹ்ரின். தனுஷ் நடித்த "பட்டாஸ்' படத்திலும் நடித்தார்.  மெஹ்ரினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. 

ADVERTISEMENT

அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை மணக்கிறார். ஓரிரு மாதங்களில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில்மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ""கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பானது இல்லை. எனவே திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க யோசித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார் நடிகை மெஹ்ரின்.

--------------------------------------------------------------------------------------------------------------

கரோனா தொற்றைத் தொடர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை எடுத்து வந்தார் கங்கனா ரணாவத்.  தற்போது கரோனாவிலிருந்து முழுமையாக மீண்டு, தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள  கங்கனா....

""கரோனா தொற்றுக் காலத்தில் மிகவும் சவாலாக இருந்தது,  தனிமையில் இருந்ததுதான்.  நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. விரைவில்  பாட்டியைச் சந்திக்கச் செல்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். 

--------------------------------------------------------------------------------------------------------------

தனது ரசிகர்களைப் பத்திரமாக இருக்குமாறும், தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்து ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். ""என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருடன் தனித்தனியாகப் பேச முடியவில்லை. அதனாலேயே இந்த ஆடியோ பதிவு. அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தயவு செய்து ஏதேனும் அவசரமான விஷயத்துக்காக மட்டுமே நீங்கள் வெளியே போக வேண்டும் என்பது என் வேண்டுகோள். எப்போதும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். இரட்டை முகக்கவசம் போடச் சொல்கிறார்கள். அதையும் அணியுங்கள்.  முகக்கவசத்தைச் சரியாக அணிந்து கரோனாவிலிருந்து தப்பித்த நிறையப் பேர்களைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்குத் தடுப்பூசி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்துப் போட்டுக் கொள்ளுங்கள். நான் போட்டுக் கொண்டேன்'' என்று அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். 

--------------------------------------------------------------------------------------------------------------

கரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக  திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் முன்னணி நடிகர்கள் உட்பட பல படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகி வந்தது, மேலும் அப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு நடிப்பில் உருவாகியுள்ள "எப் ஐ ஆர்' படம் நேரடியாக ஓ டி டி தளத்தில் வெளியாவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள "கடைசி விவசாயி' படமும் நேரடியாக ஓ டிடி  தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

--------------------------------------------------------------------------------------------------------------

அஜித் - எச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம்  "வலிமை'. கடந்த மே 1-ஆம் தேதி "வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கரோனா தொற்று காரணமாக வெளியாகவில்லை. இதனால் "வலிமை' படத்தின் புத்தம் புது தகவல்கள் குறித்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் இந்த வருடத்தில் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு விட வேண்டும் என்பது படக்குழுவின் திட்டமாக உள்ளது. இதனால் வரும் தீபாவளி பண்டிகைக்கு படம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ரஜினியின் "அண்ணாத்த', சிலம்பரசனின் "மாநாடு' படங்கள் தீபாவளி வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன.

--------------------------------------------------------------------------------------------------------------

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவ்வப்போது தலைக்காட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இவர் நடித்து வெளியான "கிராக்' குறிப்பிடத்தகுந்த வெற்றியைத் தந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள "லாபம்'  படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் இவரிடம் "" உங்களுக்கு மிகவும் அழகான நடிகராக தெரிபவர் யார்?'' என்று கேட்டுள்ளார்.

இதற்கு  நடிகை ஸ்ருதி ஹாசன், "" தெலுங்கில் மகேஷ் பாபு, தமிழில் அஜித்'' என பதிலளித்துள்ளார். 

Tags : திரைக்கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT