தினமணி கதிர்

சிரி...சிரி...

25th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

 

""மல்லிகைப் பூ என்ன வாசனையில் வேணும்?''
""அப்படின்னா?''
""கேட்கிற  வாசனை சென்ட்டைத் தூவிக் கொடுப்போம்.''

- ஏ. நாகராஜன்,
பம்மல்.  

 

ADVERTISEMENT

 

""அதென்ன..."எங்கள் வீட்டில் நாய் இல்லை'னு போர்டு வச்சிருக்கீங்க..?''
""ஆன்லைன் டெலிவரி பாய்ஸ் உணவு கொண்டு வர பயப்படறாங்க அதான்''

சாய் லட்சுமி,
சென்னை.

 

 

அவர்:  எனக்கு ஆபீஸ் போனா தலைவலியே இருக்காது.  வீட்டுல இருந்தால்தான் தலைவலி இருக்கும். 
இவர்: ஏன் அப்படி ?
அவர்: நான் தலைவலின்னு சொன்னது என் மனைவியை.
  

 

அவர்: எங்க தலைவர் நிறைய மீட்டிங்ல பேசியே அந்த வீட்டை கட்டினாரு.
இவர்: மீட்டிங்ல அவ்வளவு கல்லா வந்து விழுந்தது?

 

 

""அந்த ஜோசியர் ஆனாலும் ரொம்ப மோசம்''
""ஏன் ?''
""அவரிடம் டைம் கேட்டா அதைச்  சொல்றதுக்குக் கூட காசு கேட்கிறார்''

 

 

""நீ புடவை கடைக்கு கூப்பிட்டதுக்கு உன் கணவர் என்ன சொன்னாரு ?''
""ஆபிஸ்ல நாலு நாள் லீவு தர்ற மாட்டாங்கன்னு சொல்றாரு''

-தீபிகா சாரதி,
சென்னை -5 

Tags : kadhir Laugh ... Laugh ...
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT