தினமணி கதிர்

திரைக் கதிர்

17th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

விஜய்சேதுபதி தயாரித்து,  நடித்து வரும்  படம் "முகிழ்'. ரெஜினா ஜோடி. விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்திக் எழுதி இயக்குகிறார்.  இப்படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில்  வெளியாகிறது. "பெரும் எதிர்பார்ப்பில் உள்ள படமாக இது இருக்கும்' என்று தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார் ரெஜினா.  

--------------------------------------------------------------------------

விதார்த் நடிக்கும் "ஆற்றல்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கார் வருகிறது.  "தொழில்நுட்பத் துணையோடு ஒரு கார் எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்பதை இந்தப்படம் பேசும்' என்கிறார் இதன் இயக்குநர் 
கே.எல்.கண்ணன்.

ADVERTISEMENT

--------------------------------------------------------------------------

விஜய்யின் "மாஸ்டர்'  படம் ஆஸ்திரேலியாவில் மட்டும்  70 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  ஒரு தமிழ்ப் படத்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வரவேற்பு இது என்கிறார்கள்.  இனி வரும் வார விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை இன்னும் கூடவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது படக்குழு.

--------------------------------------------------------------------------

விவாகரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த அமலா பால்  "ஆடை' படத்தில் துணிச்சல் மிக்க கதாபாத்திரம் ஏற்று பேச வைத்தார்.  எப்போதும் நண்பர்களுடன் கேளிக்கை, சுற்றுலா என  மனம் சொல்வதைக் கேட்டு வலம் வரும் அமலாபால், இந்த புது வருடத்தில் ஆன்மிகப் பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளார்.

--------------------------------------------------------------------------

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக்செல்வன் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் "சூது கவ்வும்'.  2013- இல் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.  இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நலன் குமாரசாமி இயக்குகிறார். 

--------------------------------------------------------------------------

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடித்து வெற்றி பெற்ற படம் "மப்டி'. இப்படத்தை தமிழில் "பத்து தல' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். சிலம்பரசன், கௌதம் கார்த்திக் நடிக்கும் இதில் "அசுரன்' படத்தில் நடித்த டீஜே அருணாச்சலம் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். 

--------------------------------------------------------------------------

ADVERTISEMENT
ADVERTISEMENT