தினமணி கதிர்

சிரி... சிரி...

21st Feb 2021 06:00 AM

ADVERTISEMENT

 

""அடடே மயிலாடுதுறை ஸ்டேஷன் போயிட்டுதே!''
""ஏன் சார் ? இறங்காமல் விட்டுட்டிங்களா?''
""காபி குடிக்காமல் விட்டுட்டேன் சார்''

 

 ""ரேஸ் ஆடிப் பார்த்தேன். லாட்டரி சீட் வாங்கிப் பார்த்தேன். அதிர்ஷ்டமே அடிக்கல.''
 ""அப்புறம் எப்படிஅதிர்ஷ்டம் வந்தது?''
""கடன் வாங்க ஆரம்பித்து விட்டேன்''

ADVERTISEMENT

- ஏ. நாகராஜன்
பம்மல்.


""நம்ம தலைவரை கொடை வள்ளல்ன்னு ஏன்  சொல்றே?''
""தேர்தல் வர்ற இந்த நேரத்துலவாக்குறுதிகளைசும்மா அள்ளி அள்ளி கொடுக்கிறாரே... அதான்''


""அது என்னங்க, உங்க கழுத்துலேஒரு ஹெட்-செட்தொங்கிகிட்டே இருக்கு.
நீங்க அவ்ளோ மியூசிக் லவ்வரா?''
""நீங்க வேற.இதுதான் இப்ப ஃபேஷன்.''

 

""தலைவர் இதுவரை தேர்தலில் தோற்றதே இல்லையாம்''
""அப்படியா?''
""இப்பதான் முதல்முறையா நிற்கிறார்''


""போன படத்தைப் பற்றி என்ன சொன்ன?''
 ""நீங்க ஒரே ஸ்டைல்ல படம் எடுக்குறீங்கன்னேன்''
""இப்ப என்ன சொல்றே?''
""வழக்கமானஉங்க படம் மாதிரி இல்ல, அவர் ஸ்டைல் மிஸ்ஸிங்னேன்''

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.


""சாமியார் மேட்ரிமோனியலும் நடத்தறார் போலிருக்கு''
""ஏன்?''
""வரம் வேண்டுமா, வரன் வேண்டுமான்னு கேட்டாரே?''

ஸ்ரீ. மல்லிகா குரு,
சென்னை- 33.
 

Tags : சிரி... சிரி...
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT