தினமணி கதிர்

பேல்பூரி

21st Feb 2021 06:00 AM

ADVERTISEMENT


கண்டது

(பல்லடத்தில் ஓர் இயற்கை அங்காடியின் பெயர்) 

சிறுவயல் 

நா.இரவீந்திரன், வாவிபாளையம்.


(தென்காசியில் இறுதி ஊர்வல வண்டி ஒன்றில்)

ADVERTISEMENT

இறுதி ஊர்வலங்கள் எடுத்துரைக்கின்றன,
சம்பாதிக்க வேண்டியது பணத்தை அல்ல; 
நல்ல மனங்களை என்று.

-கு.அருணாசலம், தென்காசி.

 

(கிருஷ்ணகிரி மாவட்டம்தொகரப்பள்ளிக்கு அருகில் உள்ள கிராமத்தின் பெயர்) 

புலிகுண்டா 

-மு. மதிவாணன், அரூர். 


யோசிக்கிறாங்கப்பா!

நிறுத்தவும் முடியாமல், தொடரவும் முடியாமல் சில தேடல்கள்.
நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் சில உறவுகள்.
சொல்லவும் முடியாமல், கொல்லவும் முடியாமல் சில ஆசைகள்.
மறக்கவும் முடியாமல், வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்.
இதுவே வாழ்க்கை.

அசோக் ராஜா,
அரவக்குறிச்சிபட்டி.

 

மைக்ரோ கதை

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் கண்பார்வை இல்லாத துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.அந்த வழியாகச் சென்ற ஒருவன் துறவியைப் பார்த்து, ""ஏய் கிழவா... இந்த வழியா யாராவது போனாங்களா? என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். ""அப்படி யாரும் போனதாத் தெரியலைப்பா'' என்றார் துறவி.

அடுத்து வந்த இன்னொருவன், ""ஐயா இதற்கு முன் யாராவது இந்தப் பக்கம் போனாங்களா?'' என்று கேட்டான்.

அதற்கு துறவி, ""உன்னைப் போல ஒருவர் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் கேட்டுவிட்டுப் போனார்'' என்றார்.

சிறிது நேரம் கழித்து வந்த இன்னொருவன் சற்று மரியாதையுடன், ""இதற்கு முன்பு யாராவது இந்தப் பக்கம்சென்றார்களா ஐயா''என்று பணிவுடன் கேட்டான். 

அதற்கு அந்த கண்பார்வையில்லாத துறவி, ""மன்னா.... சிறிது நேரத்துக்கு முன்பு உங்கள் போர் வீரர் போனார். அதற்குப் பின் உங்கள் அமைச்சர் நீங்கள் கேட்ட கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டுச் சென்றார்''என்றார். 

மன்னனுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை.

""கண் பார்வை இல்லாத நீங்கள் எப்படிச் சரியாகச் சொன்னீர்கள்''என்று கேட்டான்.

அதற்குத் துறவி, ""மரியாதை இல்லாமல் பேசியவர் உங்கள் படை வீரனாகத் தான் இருக்க வேண்டும்.அடுத்து வந்து சிறிது மரியாதை கொடுத்துப் பேசியவர் உங்கள் அமைச்சராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.நீங்கள் மிகுந்த மரியாதையுடன் என்னிடம் பேசியதால் உங்களை மன்னர் என்று தெரிந்து கொண்டேன்'' என்றார்.

ஒருவருடைய பேச்சு, நடத்தையை வைத்துஅவர் யாரென்று சொல்லிவிட முடியும் என்பதை மன்னன் தெரிந்து கொண்டான். 

அ.ப.ஜெயபால்,சிதம்பரம். 

 

எஸ்.எம்.எஸ்.


புரிந்து கொள்ளப்படாததை விட வேதனையானது... 
தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதுதான்!

பி கோபி,
கிருஷ்ணகிரி- 1


அப்படீங்களா!


அடிக்கடி நாம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள கிருமிகள், தீநுண்மிகளை அழிக்காமல், எத்தனை தடவை கைகளைக் கழுவினாலும் அதனால் பயனில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்போதும் நம் கைகளில் இருக்கும் செல்லிடப் பேசிகளில் கழிவறைகளில் உள்ளதை விட 10 மடங்கு கிருமிகள், தீநுண்மிகள் இருப்பதாக யுனிவர்சிட்டி ஆஃப் அரிúஸானாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

செல்லிடப் பேசிகளில் உள்ள கிருமிகளை, தீ நுண்மிகளைஅழிப்பதற்கு நாம் பயன்படுத்தும் சானிட்டைசர்கள் முழுமையாக அவற்றைக் கொல்வதில்லை.மேலும் இந்த சானிட்டைஸர்கள் செல்லிடப்பேசியின் திரையில் படும்போது, அதில் உள்ள மேற்பூச்சைபாதிப்புக்குள்ளாக்குகின்றன.


இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும்விதமாக,செல்லிடப்பேசியில் உள்ள வைரஸ்களை அழிப்பதற்கு புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தும் நிறையக் கருவிகள் இப்போதுவந்துவிட்டன. 

தீநுண்மிகளைக் கொல்லத் தேவையான அளவுக்கு புற ஊதாக் கதிர்கள் பல்புகளின் மூலம் இந்தக் கருவிகளில் வெளியிடப்படுகின்றன.செல்லிடப் பேசியின் எல்லாப் பகுதிகளையும் தூய்மைப்படுத்தக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கருவிகளை நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்லவும் முடியும். 

இந்தக் கருவியைப் பயன்படுத்தும்போது வெளியிடப்படும் புற ஊதாக் கதிர்கள் நம் மேல் பட்டால், பாதிப்பு ஏற்படும் என்பதால், புற ஊதாக் கதிர்கள் கொஞ்சம் கூட கசியாத அளவுக்குஇந்தக் கருவிகள்தயாரிக்கப்படுகின்றன. 

என்.ஜே., சென்னை-58.
 

Tags : பேல்பூரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT