தினமணி கதிர்

கோபுரங்கள் தேவையில்லை!

14th Feb 2021 06:00 AM |  - அங்கவை  

ADVERTISEMENT

 

செய்தித்  தொடர்பில் உலகத்தை  அலைபேசிகள் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு  போக  உதவியாக இருப்பது  இணையத்   தொடர்புகள்.

இப்போது அலைபேசி, இணைய வசதிகள் 4 ஜி,  5 ஜி   என்று  மாறிக்கொண்டு வந்தாலும்,  இந்த  அலைக் கற்றைகள்  செயல்பட,   செய்தித் தொடர்புகளுக்காக   கோபுரங்கள் தேவை.  இணைய சேவை வழங்கும்  தனியார் நிறுவனங்களிடம் போதுமான  "கோபுரங்கள்' இல்லை.  இதனால் தனியார் நிறுவனங்கள் வழங்கும் இணைய சேவைகளில் வேகம் தொடக்க நிலையில் அதிகமாக இருந்தாலும்,   பயனாளர்களைச்  சென்று அடையும் போது  வேகத்தின் சக்தி மிகவும் குறைந்து விடுகிறது. அதனால்  பெரும்பாலானவர்களுக்கு  தங்களது வேலைகளை நிறைவேற்றுவதில்  சுணக்கம் ஏற்படுகிறது. மன உளைச்சல் ஏற்படுகிறது. 

இந்தப் பிரச்னைக்கு  முடிவு கட்டியிருப்பவர்   எலான் மஸ்க். எலான் மஸ்க்கின் "ஸ்டார் லிங்க்'  நிறுவனம்  அலைபேசி,  கணினி  இயக்கங்களுக்குத் தேவையான இணைய அலைக்கற்றைகள்,  பயனாளர்கள்  பயன்படுத்தும் அலைபேசி, கணினிகளைச் சென்று அடைய கோபுரங்களின்  அவசியத்தை இல்லாமல் ஆக்கும்.  அலைபேசிகளுக்கும், கணினிகளுக்கும், இணையத் தொடர்பை துணைக் கோள்களிலிருந்து நேரடியாக வழங்கும்.  தொலைதூர செய்தித் தொடர்புகளுக்கு  உதவும் "இரும்புக்   கோபுரங்கள்'  இனி தேவையில்லை.  

ADVERTISEMENT

அலைபேசிகளுக்கும், கணினிக்கும்  இணைய  சேவைகளைத் துணைக் கோளிலிருந்து வழங்க , எலான் மஸ்க்  "ஸ்பேஸ் எக்ஸ்' என்ற துணைக் கோளை விண்ணுக்கு  சென்ற வாரம்  ஏவியுள்ளார். துணைக் கோள் மூலமாக நேரடியாக வழங்கப்படும் இணைய  வசதிகளின்   வேகம் இப்போதைய வேகத்தை விட ,   மிக அதிகமாக இருக்குமாம். இந்த வசதி  மிக விரைவில் கிடைக்கும். அதனால் செய்திப் பரிமாற்றங்கள், தொலைதூர தொடர்புகள் மிக வேகமாக,  குறைந்த  நேரத்தில் நடக்கும்!

ADVERTISEMENT
ADVERTISEMENT