தினமணி கதிர்

திரைக்கதிர்

22nd Aug 2021 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், மூத்த நடிகை மேனகாவின் மகள். தமிழில் "இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து "ரஜினி முருகன்' படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து "தொடரி', "பைரவா', "ரெமோ', "சாமி 2', "சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான "நடிகையர் திலகம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதைப் பெற்றார். இதையடுத்து ரஜினியுடன் "அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துவிட்டார். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் "சர்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து "சாணிக் காயிதம்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சூர்யா தயாரிப்பில் பாலா இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அவர் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT

-----------------------------------------------------------------------

 

படப்பிடிப்புக்கு தாமதம் போன்ற செய்திகளால் பல சர்ச்சைகளைச் சந்தித்தவர் சிம்பு. ஆனால் சமீபகாலமாக அவரது நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் தெரிகின்றன. கரோனா ஊரடங்கு காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையைக் குறைத்தவர் ஒரு மாதத்தில் "ஈஸ்வரன்' படப்பிடிப்பை முடித்தார்.

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் "வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராதிகா இந்தப் படத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்றது. சிம்பு போஸ்டரில் மிரட்டலான பார்வையுடன் எரியும் காட்டில் சிறு வயது தோற்றத்தில் மிரட்டியிருந்தார். ஏற்கெனவே உடல் எடை குறைந்து ஃபிட் ஆக மாறியிருந்த சிம்பு இந்தப் படத்திற்காக மேலும் தீவிர உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். தற்போது சிம்பு எடுத்துள்ள செல்பி புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மிகவும் ஃபிட் ஆன தோற்றத்தில் மெலிந்து போய் சின்னப் பையன் போல இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


----------------------------------------------------------------------

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவைப் போல் வில்லன் வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏற்கெனவே மாதவனின் "விக்ரம் வேதா', ரஜினிகாந்தின் "பேட்ட', விஜய்யின் "மாஸ்டர்' ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார். இவற்றில் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. தற்போது "விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நடிக்கசம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது.


-----------------------------------------------------------------------

 

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். பன்முகத் திறமை கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். "மங்காத்தா', "விஸ்வரூபம்', "அரண்மனை', "வடசென்னை', "தரமணி', "மாஸ்டர்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். நடிப்பைத் தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர்.

அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் "பிசாசு 2' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கும் ஆண்ட்ரியா, தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அதோடு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளையும் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா கராத்தே பயிற்சி மேற்கொள்ளும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தீவிரமான கராத்தே பயிற்சியை தனது பயிற்றுநருடன் இணைந்து செய்து வருகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆண்ட்ரியா அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் "விக்ரம்' படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் கராத்தே பயிற்சி எடுப்பதால் படத்தில் அவருக்கு சண்டைக் காட்சி இருக்கும் என தகவல் பரவுகிறது.

-----------------------------------------------------------------------


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் கடந்த 2009-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான "லக்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு முருகதாஸ் இயக்கத்தில் வெளியான "7-ஆம் அறிவு' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இதையடுத்து தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டவர்களோடும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் "லாபம்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் "சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

பன்முகத் திறமை கொண்ட சுருதிஹாசன், நடிப்பைத் தாண்டி, பாடகியாகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகஇருக்கும் ஸ்ருதிஹாசன், அவ்வப்போது, தனதுகாதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். தனது தந்தை கமலஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT