தினமணி கதிர்

திரைக்கதிர்

1st Aug 2021 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தொடர்ந்து திரைப்படங்களில்  நடித்து வந்த காஜல், கடந்த ஆண்டு கரோனா நேரத்தில் தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.  நிறைய வாய்ப்புகள் குவிந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடிக்கிறார். தமிழில் "இந்தியன் 2' படம் மட்டும் கைவசம் இருந்த நிலையில் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார். 

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் ஸ்டைலிஷான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.


----------------------------------------------
 

ADVERTISEMENT

ரஜினிகாந்துக்கு மொழி, நாட்டைக் கடந்து ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். "முத்து' படத்தில் தொடங்கியது ரஜினியின் ஜப்பான் அலை. அந்தப் படத்தில் இடம் பெற்ற, "தில்லானா தில்லானா நீ தித்திக்கும் தேனா' பாடலில், ரஜினியின் நடனத்தில் மயங்கிப் போன ஜப்பானியர்கள் அவருக்கு "டான்ஸ் மகாராஜா' என்ற பட்டத்தை அளித்தனர். ரஜினியின் படங்கள் ஜப்பானில் தொடர்ந்து வெளியாகி பெரிய வெற்றி பெற்று வருகின்றன. 

ரஜினியின் ரசிகர்களான ஜப்பானியர்கள் தமிழகம் வந்து அவரைச் சந்தித்த நிகழ்வும் நடந்தது. ரஜினியின் "தர்பார்' படம் வெளியான போது, ஒரு ஜப்பானிய ரசிகர் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து சென்னை வந்தார். சரளமாக தமிழில் பேசி ஆச்சரியம் அளித்தார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான "தர்பார்'  திரைப்படம் கடந்த வாரம் ஜப்பானில் வெளியானது. அது வெளியானதை ஜப்பானில் உள்ள தமிழர்களுடன் சேர்ந்து  ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களும்  கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பானின் கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய பகுதிகளில் "தர்பார்' கூடுதலாக திரையிடப்பட்டுள்ளது. 

 

----------------------------------------------


யோகிபாபு விஜய்யுடன் "பீஸ்ட்' படத்திலும், அஜித்துடன் "வலிமை' படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர பல படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  சினிமாவில் பிசியான நடிகரான யோகிபாபு, சமீபத்தில் தனது வீட்டில் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். 

இதற்கிடையே கடந்த ஆண்டு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் யோகிபாபு. இந்த தம்பதிக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது பிறந்தநாளோடு தனது மகன் பெயர் சூட்டும் விழாவையும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார் யோகிபாபு. கடவுள் பக்தி அதிகம் கொண்ட யோகி பாபு, தீவிர முருகர்  பக்தர். அதனால் தனது மகனுக்கு "விசாகன்' என பெயர் வைத்துள்ளார். இந்த பெயர் சூட்டும் விழாவில் இயக்குநர்கள் சுந்தர்.சி, விருமாண்டி உள்ளிட்ட  சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

----------------------------------------------


"காதல் தேசம்', "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', "சினேகிதியே' படங்களில் நடித்தவர் தபு. ஹிந்தியில் முன்னணி நடிகை. தற்போது ஹீரோயினாக இல்லை என்றாலும் கதைக்கு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் தபு. 

தற்போது 50 வயதாகும் தபு "எ சூட்டபிள் பாய்' என்ற இணையதள தொடரில் சர்ச்சையான காட்சிகளில் கூட நடித்து இருந்தார். இந்த நிலையில் இவர் வெறும் துண்டை அணிந்து கையால் அதை பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் 50 வயதிலும் இப்படியா என்று அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags : kadhir Thiraikadhir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT