தினமணி கதிர்

பேல்பூரி 

DIN


கண்டது

(விருதுநகர் வேலைவாய்ப்புஅலுவலகத்தில்)

வேலை உறுதி... பதியுங்கள்!
பதியுங்கள்... பகிருங்கள்...
காத்திருங்கள்!

ஏ.எஸ்.ராஜேந்திரன்,
வெள்ளூர்.

(பாண்டிச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ளஒரு கோயிலின் பெயர்)


ஏழை மாரியம்மன் கோயில்

ந.சண்முகம், திருவண்ணாமலை.

(தருமபுரி - பொம்மிடி செல்லும் சாலையில்உள்ள ஊரின் பெயர்)

ஜாலியூர்
 

ப நரசிம்மன், தருமபுரி-1.

(திருநெல்வேலியில் ராம் முத்துராம் தியேட்டர் அருகில் ஓர் உணவகத்தின் பெயர்)

சாப்டீங்களா ஆதஞ?

சசிகுமார்,
திருச்சி.

கேட்டது

(திருச்சி ஓயாமாரி சுடுகாட்டு சாலையில்உள்ள எஞ ஈஉஅஈ நகஞர போர்டு அருகில்தாத்தாவும் பேரனும்)

""பேராண்டி போர்டுல என்னா எழுதியிருக்கு?''
""மெதுவா செத்துப் போகவும்ன்னு எழுதியிருக்கு தாத்தா ''

மு.தாஜுதீன்,
தஞ்சாவூர்-5

(தருமபுரி எஸ்.வி. ரோட்டில் தந்தையும் மகனும்)

""என்னப்பா அந்த ஆட்டோ டிரைவர் உங்ககிட்ட சார் ஆட்டோ வேணுங்களான்னு கேட்கிறாரு?''
""கேட்டா என்ன?''
""உங்ககிட்ட ஆட்டோவைக் கொடுத்துட்டா, அவர் சாப்பாட்டுக்கு என்னப்பா செய்வாரு? ''

எஸ்.சத்யா,
கம்பைநல்லூர்

யோசிக்கிறாங்கப்பா!

நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும்,
வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும்,
உறுத்திக் கொண்டே தான் இருக்கும்...
நீங்கள் உதறித் தள்ளும் வரை!

ப. பச்சமுத்து,
கிருஷ்ணகிரி-1

மைக்ரோ கதை

""என்னங்க காலைல காலேஜ் போன நம்ம சுலோச்சனா இன்னும் வீடு திரும்பல.போன் அடிச்சுப் பார்த்தா ஸ்விட்ச் ஆப்னு வருது. அவளோட நெருங்கின பிரண்ட் சுமதி கிட்ட போன் பண்ணி கேட்டுட்டேன். அவ காலேஜ் முடிச்சு அப்பவே கிளம்பிட்டாளேன்னு சொல்றா. கொஞ்ச நாளாவே அவ நடவடிக்கையே சரியில்ல யாருகிட்டயோ போன்ல அதிக நேரம் பேசுறா... எனக்கென்னமோ பயமா இருக்குங்க'' என கணவர் தணிகாசலத்திடம் புலம்பினாள் வசுந்தரா.

""இங்க பாரு வசுந்தரா வீணா சந்தேகப்படாதே... நம்ம பொண்ணு ஒன்னும் லவ் பண்ணி பசங்களோட சுத்துற ரகமெல்லாம் இல்ல. அவ போன்ல படிப்பு சம்பந்தமா ஏதாச்சும் பேசிட்டு இருந்திருப்பா'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுலோச்சனா வந்துவிட்டாள்.

""ஏன்டி சுலோச்சனா காலேஜ் முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது? எங்கடி போய் சுத்திட்டு வர்றே? செல்லுக்கு போன் அடிச்சா ஸ்விட்ச் ஆப்னு வருது... நேரம் ஆக ஆக நான் எவ்ளோ பதறிப் போயிட்டேன் தெரியுமா?'' என பொரிந்து தள்ளினாள் வசுந்தரா.

""அம்மா என் பிரண்டோட அக்காவுக்கு இன்னக்கி டெலிவரி. டாக்டர் ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாங்களாம். ஆப்ரேசனுக்கு "ஓ பாசிட்டிவ்" ரத்தம் தேவைப்பட்டதால என் பிரண்டு என்கிட்ட போன் பண்ணி கேட்டா. காலேஜ் முடிஞ்சதும் நேரா ஹாஸ்பிடல் போய் ரத்தம் கொடுத்துட்டு வர்றேன்'' என்றாள்.

-வெ.தமிழ்க்கனல்,
ஆலங்குடி.

எஸ்.எம்.எஸ்.

நமது மகிழ்ச்சிக்கான சாவியை
அடுத்தவரிடம் கொடுத்துவிடாதீர்கள்...
அவர்களை இழந்துவிட்டால்
நாம் மகிழ்ச்சியையும் இழக்க நேரிடும்.

- மீ.யூசுப் ஜாகிர்,
வந்தவாசி.

அப்படீங்களா!

கரோனா தொற்று நமது அன்றாட செயல்களை மாற்றிவிட்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்பவர்களின் பையில் ஒரு சானிட்டைசர் பாட்டில் நிச்சயம் இருக்கிறது. அந்தப் பாட்டிலிலிருந்து சானிட்டைசரைக் கைகளில் கொட்டி அடிக்கடி தூய்மைப்படுத்துவதும் சாதாரணமாகிவிட்டது. என்றாலும் இப்படித் தூய்மைப்படுத்துவதிலும் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.

தீநுண்மி தொற்று உள்ள கைகளைப் பயன்படுத்தி, பையில் உள்ள சானிட்டைசர் பாட்டிலை எடுக்கும்போது பையில், தொடுமிடங்களில் கரோனா தீநுண்மி தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் நிதானமாகச் சானிட்டைசர் பாட்டிலை எடுத்து கைகளைத் தூய்மைப்படுத்துவதும் இயலாததாக உள்ளது.

இதற்கு மாற்றாக கையின் மணிக்கட்டில் பொருத்தக்கூடிய "ஸ்பிரேகேர் பாண்ட்' என்ற கருவி வந்துள்ளது. இதில் உள்ள எல்இடி இண்டிகேட்டர் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ள இடங்களை அடையாளம் காட்டிவிடுகிறது. இந்த ஸ்பிரேகேர் பாண்ட் - இல் சானிட்டைசர் பாட்டில் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால், அதிலிருந்து உள்ளங்கை விரல்களை நோக்கி 3 விநாடிகள் சானிட்டைசர் ஸ்பிரே ஆகிறது.

ஸ்பிரேகேர் பாண்ட் - இலிருந்து 5 அங்குல தூரம் வரை சானிட்டைசர் ஸ்பிரே ஆகிறது. இந்தப் பாட்டிலை ஒருமுறை நிரப்பிவிட்டால் 40 தடவைகள் கைகளைத் தூய்மையாக்கிக் கொள்ள முடியும். இந்த ஸ்பிரேகேர் பாண்ட்- ஐ பேட்டரி மூலமாக ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT