தினமணி கதிர்

திரைக் கதிர்

27th Sep 2020 06:00 AM

ADVERTISEMENT

 

சுந்தர். சி தயாரிக்கும், ஆறாவது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. முற்றிலும் காமெடியாக உருவாகும் இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டவில்லை. பண மதிப்பிழப்பின் போது, சிலரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளைக் காமெடியாகக் கூறுவதே படத்தின் கதை. இதில், பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பத்ரி இயக்குகிறார்.

 

மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக "த்ரிஷ்யம்' படத்தில் நடித்தார் மீனா. அப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார். இப்போது மலையாளத்தில் "த்ரிஷ்யம் 2' படம் தொடங்க உள்ளது. இதிலும் நடிக்க மீனாவை அழைத்துள்ளார் மோகன்லால்.

ADVERTISEMENT

 

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின், "கவிதாலயா' படநிறுவனம், தற்போது, "ஆன்லைன்' இணையதள தொடர்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. தற்போது, "டைம் என்ன பாஸ்' என்ற, புதிய இணையதள தொடரை உருவாக்கியுள்ளது. இதில், பரத், ப்ரியா பவானி சங்கர், கருணாகரன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்தொடர், "அமேசான்' தளத்தில் வெளியாகியுள்ளது.

 

வீட்டில் ஓய்வெடுக்கும் சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் உடற்பயிற்சி வீடியோ, சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி இருவரும் ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறார்கள்.

 

தமிழில் "ஆடுகளம்', "வந்தான் வென்றான்', "ஆரம்பம்' உள்ளிட்ட படங்களில் நடித்த டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு "கேம் ஓவர்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தை அடுத்து காமெடியை மையப்படுத்திய விஜய் சேதுபதி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தமிழில் ஜெயம் ரவியுடன் "ஜனகனமன' படத்திலும் டாப்சி நாயகியாக நடிக்கவுள்ளார்.

 

பார்த்திபன் இயக்கி நடித்த "ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற படம் தற்போது 2020 டொரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. ஜுரி விருதான சிறந்த படம், சிறந்த டைரக்டர், சிறந்த தனிநபர் நடிப்பு என மூன்று விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

 

"நோ என்ட்ரி' என்ற படத்தில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் ஆர்.அழகு கார்த்தி இயக்குகிறார். உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் படத்தின் முழுப் படப்பிடிப்பும் நடந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT