தினமணி கதிர்

சிரி... சிரி...

6th Sep 2020 08:13 PM

ADVERTISEMENT

 

நிருபர் : உங்களோடவருங்கால கணவர் எப்படிஇருக்கணும்?
நடிகை : கடந்த காலத்தைப் பற்றி பேசி, நிகழ்காலத்தை நாசமாக்காமல், எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறவராஇருக்கணும்.

 

 

ADVERTISEMENT

நிருபர் : உங்களோடகாதலுக்கு நடிகையோடஅம்மா ஒத்துக்கலையாமே?
நடிகர்: அவுங்க எதுக்கு ஒத்துக்கணும்? நான் அவுங்களைகாதலிக்கலையே?

 


""எங்க வீட்டுலதிருடிக்கிட்டுப்போனவன் பஞ்சத்துலஅடிபட்டவனா இருப்பான்னு தோணுது சார் !''
""எப்படிச் சொல்றீங்க?''
"" ஒரு வாரம், பத்து நாளைக்கு முந்தி என் மனைவி செய்து பிரிஜ்ல வச்சிருந்த சாம்பார், ரசம், பொரியல்ன்னுஎல்லாத்தையும் காலி பண்ணிட்டு போயிருக்கான் சார்?''

 

 

பேஷண்ட் : போன தடவை கொடுத்த மருந்து சீட்டைக் காட்டினா, டாக்டர் ஏன்
பார்க்கவே இல்ல சிஸ்டர் ?
நர்ஸ்: எழுத்து புரியாததைப் பார்த்து எதுக்கு நேரத்தை வீணாக்கணும்னு
விட்டிருப்பாரு சார்

 


""கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
""ஆக்கிரமிப்புக்கு முந்தி கால்வாய் ; ஆக்கிரமிப்புக்குப் பிறகு வாய்க்கால்''

 

- வி. ரேவதி, தஞ்சை.

 


ஹீரோ : என்னது... நம்ம படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிக்க அனுமதி
கொடுத்துட்டாங்களா?
டைரக்டர் : உங்க படத்துக்கு ஷோவுக்கு பத்து பேர் வருவதே கஷ்டம்னு தெரிஞ்சு, சமூக இடைவெளி பிரச்னை வராதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாம்!

 

- கே.எம். ஃபாரூக்,  சென்னை - 92.

ADVERTISEMENT
ADVERTISEMENT