தினமணி கதிர்

திரைக்கதிர்

25th Oct 2020 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி "தலைவி' என்ற பெயரில் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். சட்டசபையில் ஜெயலலிதா மாதிரியான தோற்றத்தில் கங்கனா இருக்கும் புகைப்படத்தை தன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஏ.எல்.விஜய்.

 

மலையாள நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் பார்வதி. இவர் தமிழில் "பூ', "சென்னையில் ஒரு நாள்' , "உத்தமவில்லன்', "மரியான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

 

"ஆருத்ரா', "ஸ்கெட்ச்', "பாண்டி முனி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பெங்காலி நடிகையான மேகாலி. தற்போது, அதிரடி கவர்ச்சியுடன், "போட்டோஷூட்' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

 

தனுஷ் நடித்த "மயக்கம் என்ன' படத்தில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். சிம்புவுடன் "ஒஸ்தி' படத்தில் நடித்தார். பிறகு சினிமாவே வேண்டாம் என்று விலகினார். "8 வருடங்களுக்கு முன்பு நடிப்பை விட்டு விலகிய என்னை மீண்டும் நடிக்க அழைக்காதீர்கள்' என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார் ரிச்சா.

 

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறதாம்.

 

போதைப்பொருள் விவகாரத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர். சமீபத்தில் இவர்கள் இருவரும் மோதிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.சினிமாவில் பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் பரபரப்பாகவே இருப்பவர் நடிகை அதா சர்மா. கடந்த வாரம் தனக்கு காய்ச்சல் என தெரிவித்தவர், இளம் சிவப்பு நிற உடையணிந்த படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT