தினமணி கதிர்

மின்சார மரம்

25th Oct 2020 06:00 AM | - என்.ஜே.

ADVERTISEMENT


மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள சிஎஸ்ஐஆர் - சிஎம்இஆர்ஐ - யின் குடியிருப்பு வளாகத்தில் ஒரு மின்சார மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

உருவாக்கியவர்கள் சிஎஸ்ஐஆர் - சிஎம்இஆர்ஐ நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

இரும்பாலான இந்த மரத்தின் இரும்புக் கிளைகளில் 35 சூரிய ஒளித் தகடுகள் ( சோலார் பிவி பேனல்கள்) பொருத்தப்பட்டுள்ளன. ஒரு சூரிய ஒளித்தகட்டில் 330 டபிள்யூபி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த 35 சூரிய ஒளித்தகடுகளின் மூலம் ஒரு நாளைக்கு 11.5 கேடபிள்யூபி மின்சாரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் இந்த சூரிய ஒளி மின்சார மரம் உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின்சார மரம் என்ற பெருமையைப் பெறுகிறது. இதே போன்று லண்டனில் உள்ள ஒரு சூரிய ஒளி மின்சார மரத்தின் மூலம் 8.6 கேடபிள்யூபி மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

சாதாரணமாக வீட்டின் கூரை மேல் பொருத்தப்படும் சூரிய ஒளி மின்சாரத் தகடுகளின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை நாம் தேவைக்கேற்றவிதத்தில் குறைக்கவோ, கூட்டவோ முடியாது. இந்த மின்சார மரத்தின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை தேவைக்கேற்ற விதத்தில் மாற்றி அமைக்க முடியும்.

ADVERTISEMENT

இதில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளித்தகடுகளின் கோணத்தையும் தேவைக்கேற்ற விதத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

""மின்சார வசதி இல்லாத அல்லது மிகக்குறைந்த அளவே மின்சார வசதி உள்ள கிராமப்புறங்களில் வேளாண்மைப் பணிகளைச் செய்ய இம்மாதிரியான சூரிய ஒளி மரங்களை அமைக்கலாம். அதன் மூலம் நீரிறைக்கும் பம்புகள், மின்சார டிராக்டர்கள், மின்சார உழு கருவிகள் ஆகியவற்றை இயக்க முடியும்'' என்
கிறார்கள் சிஎம்இஆர்ஐ-யின் அறிவியலாளர்கள்.

அனல் மின்நிலையம் போன்றவற்றின் மூலம் இந்த மின்சார மரம் தயாரிக்கும் அளவு மின்சாரத்தைத் தயாரிக்கும் போது, 10-இலிருந்து 12 டன்கள் வரை எடையுள்ள கார்பன்டை ஆக்ûஸடு காற்றில் கலந்து காற்றை மாசாக்கிவிடும்.

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT