தினமணி கதிர்

திரைக்கதிர்

18th Oct 2020 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு கதைகளின் கூட்டுக்கலவையாக உருவாகும் ஆந்தாலஜி வகை திரைப்படங்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அமேசான் பிரைமில், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய ஐந்து இயக்குநர்கள் உருவாக்கியுள்ள படம் "புத்தம் புது காலை'. தற்போது ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.

----------------------------------------------------------------------------------------

 
கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் "ஆபீசர்'. நாகார்ஜுனா, பேபி காவியா, உட்பட பலர் நடித்திருந்தார்கள். ராம்கோபால் வர்மா இயக்கினார்.  தற்போது இந்தப் படம் "சிம்டாங்காரன்' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது.

ADVERTISEMENT

----------------------------------------------------------------------------------------

 
கடந்த 7-ஆம் தேதி நாகசைதன்யா - சமந்தா தங்களது 3-ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார்கள். "எனக்காக நீங்கள், உங்களுக்காக நான். எந்த கதவாக இருந்தாலும் அதை நாம் ஒன்றிணைந்து திறப்போம், இனிய திருமண நாள் வாழ்த்துகள் கணவரே'  என சுட்டுரையில் பதிவிட்டுள்ளார் சமந்தா.

----------------------------------------------------------------------------------------

 
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் "ஆர்ஆர்ஆர்'. கரோனா பொது முடக்கம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. அதன்பின் படத்தின் இயக்குநர் ராஜமவுலியும் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தார். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அதற்குள்ளாக "ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார். 

----------------------------------------------------------------------------------------

ரோனா, தென்னிந்திய சினிமாவில் கிலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகை ராஷி கன்னா, ஆடையைத் துறக்கும் அளவுக்கு கவர்ச்சி, "போட்டோஷூட்' நடத்தி, இணையத்தில் உலவ விட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய  கருத்துகளைப்  பதிந்து வருகின்றனர்.

----------------------------------------------------------------------------------------

 
"ஐங்கரன்', "ஆயிரம் ஜென்மங்கள்', "ஜெயில்', "4ஜி', "காதலைத் தேடி: நித்யானந்தா', "காதலிக்க யாருமில்லை', "பேச்சிலர்' இவை அனைத்தும் ஜி.வி.
பிரகாஷ் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள். இதுதவிர "டிராப் சிட்டி' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்து வருகிறார்.

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT