தினமணி கதிர்

நினைவைப் போற்றும் 100 ரூபாய் நாணயம்!

18th Oct 2020 06:00 AM | -ஜே 

ADVERTISEMENT

 

கடந்த 2001 - ஆம் ஆண்டு மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே சிந்தியாவின் 100 -ஆவது பிறந்த நாள் நிறைவடைந்ததையொட்டி, அதன் நினைவாக நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி 12.10.20 அன்று வெளியிட்டார்.

இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் விஜயராஜே சிந்தியாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. விஜயராஜே சிந்தியாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா என்று படத்தின் மேல் பகுதியில் இந்தியிலும், கீழ் பகுதியில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. அவருடைய பிறந்த - மறைந்த ஆண்டுகள் குறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் மறுபக்கத்தில் அசோகர் ஸ்தூபியின் படமும், 100 ரூபாய் மற்றும் இந்தியா என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியா, பாஜகவின் முன்னோடி அமைப்பான ஜனசங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர். "குவாலியரின் ராஜமாதா' என்று கருதப்பட்டவர். ர ôஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேசத்தின் கேபினட் அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியா, மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா ஆகியோரின் தாயார். பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா, இவரின் பேரன்.

இதைப் போன்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 94-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 2018 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது,
குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT