தினமணி கதிர்

தூய்மையாக்கும் கோல்!

ந.ஜீ.

புற ஊதாக் கதிர்கள் மூலம் கரோனா தீநுண்மியை அழிக்க முடியும் என்ற அடிப்படையில் பல கருவிகள் வந்துவிட்டன. குளிர்சாதனப் பெட்டி வடிவில் வந்துள்ள ஒரு கருவியின் உள்ளே பொருள்களை வைத்துவிட்டால் கரோனா தீநுண்மியை சில நிமிடங்களுக்குள் அது அழித்துவிடும்.

வீட்டில் உள்ள மேசை, சோபா, கதவு, ஜன்னல் ஆகியவற்றை அந்தக் கருவிக்குள் எப்படி வைக்க முடியும்? இவற்றையெல்லாம் தூய்மைப்படுத்த வீடு முழுக்க பரவும்விதமாக புற ஊதாக்கதிர்களைச் செலுத்த வேண்டும். அது மனிதர்களின் மீது பட்டால் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும்.

இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லாத, "எக்ஸ் 5 ஸ்டெர்லைஸிங் வாண்ட்' என்ற "தூய்மையாக்கும் கோல்' ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

புற ஊதாக் கதிர்கள் மூலம் இயங்கும் இந்த தூய்மையாக்கும் கோல், 99.9 சதவீதம் பாக்டீரியாக்கள், தீநுண்மிகளை அழித்துவிடுகிறது.

பேட்டரி மூலம் இந்தக் கருவியை ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டால் 10 ஆயிரம் மணி நேரங்கள் பயன்படுத்த முடியும். இந்தக் கருவியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர் வெளிச்சத்தை சோபா, கதவு, புத்தகம், ரூபாய் நோட்டுகள், துணிகள், மவுஸ், கம்ப்யூட்டர் என தூய்மையாக்கப்பட வேண்டிய பொருள்களின் மீது காட்டினால் 3 நிமிடங்களில் அவைதூய்மையாகிவிடும்.

தூய்மைப்படுத்தப்பட்டவுடன் இந்தக் கருவி தானாகவே இயங்குவதை நிறுத்திக் கொள்ளும். புற ஊதாக் கதிர்கள் மனிதர்களின் மீது படும்போது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், குழந்தைகள் இதைப் பயன்படுத்தாமல் தடுக்கும் முறையும் இதில் உள்ளது.

புற ஊதாக்கதிர்களைப் பார்த்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான கண்ணாடியும் இந்தக் கருவியுடன் தரப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT