தினமணி கதிர்

திரைக் கதிர்

DIN


பசுமை இந்தியாவுக்கான சவாலில், திரையுலகினரும் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும், இதில் இணைந்துள்ளார். மூன்று மரக்கன்றுகளை நட்டுள்ளார். "இந்த சங்கிலி தொடர வேண்டும்' என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

----------------------------------------------------------------------------------

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணான விமலா ராமன், கே.பாலச்சந்தர் இயக்கிய "பொய்' படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு "ராமன் தேடிய சீதை', "இருட்டு' படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெப் சீரிஸ் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

----------------------------------------------------------------------------------

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் முதன் முதலாகத் தயாரிக்கும் படம் "நெற்றிக்கண்'. இப்படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாநாயகியாக நடிக்கிறார். 2011-இல் கொரிய மொழியில் வெளியான "பிளைன்ட்' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி, அதைப் படமெடுத்து வருகிறார்களாம்.

----------------------------------------------------------------------------------

விஜய்யைச் சந்தித்த போட்டோவை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி. அதில் அவர் "உள்ளே வந்தா பவரடி.. அண்ணா யாரு? தளபதி' என்று குறிப்பிட்டுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

----------------------------------------------------------------------------------

தென்னிந்திய சினிமாவில் 1 பில்லியன் பார்வையாளர்களின் சாதனையைப் படைத்துள்ள முதல் பாடல் "மாரி2' வில் இடம்பெற்ற "ரவுடி பேபி...' பாடல்தான். இதை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

----------------------------------------------------------------------------------

""நடிகர், நடிகைகளை தமிழ், தெலுங்கு ரசிகர்கள் கடவுள் மாதிரி பார்க்கிறார்கள்'' எனதமிழில் "முகமூடி' படத்தில் நடித்த பூஜா ஹெக்டே ஆச்சரியத்துடன் சொல்லியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT