தினமணி கதிர்

சிரி... சிரி... 

29th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT

 

""படத்துல உங்களுக்கு வசனமே கிடையாது சார் !''
""ஊமையாநடிக்கிறேனா சார்?''
""இல்ல ... நீங்க ஒரு குடும்பத் தலைவன்''

 

""ராத்திரி திருட வந்தவன், நம்பஜிம்மியோட வாலை மிதிச்சிருப்பான்னு தோணுது. சரசு''
""எப்படி சொல்றீங்க?''
""எப்பவும் கத்தாத நம்ப ஜிம்மி, ராத்திரி, "வால் ... வால்,' ...னு கத்திச்சே''

ADVERTISEMENT

 

""அந்த மந்திரவாதியோட சம்சாரமும், மாமியாரும் அவரை விட்டுட்டு ஓடிப் போயிட்டாங்களாமே?''
""இவரு எப்பவும் பேயை விரட்டறேன், பிசாசை விரட்டறேன்னு மந்திரம் பண்ணிக்கிட்டேஇருந்ததுதான் காரணம்''

 

""அவர் உண்ணாவிரத போராட்டத்துலகலந்துக்கதான் போறார்னு எதை வச்சு சொல்ற?''
""கையில, பார்சலுக்கு ஏத்த மாதிரி பெரிய டிபன் கேரியர்
எடுத்திட்டுப்போறாரே''

 

""பொண்ணு பார்க்க வந்த பையனை தனியா பேசணும்னுஅழைச்சிட்டுப் போய் எதுக்குடீ அடிச்சே ?''
""கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒத்துவருவானான்னுசெக் பண்ணினேன் மம்மி!''

- வி. ரேவதி, தஞ்சை.

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT