தினமணி கதிர்

திரைக் கதிர்

22nd Nov 2020 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியாபட் உள்ளிட்டோரை வைத்து "ஆர்ஆர்ஆர்' எனும் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. சுதந்திரப் போராட்டக் கால கதையாக உருவாகும் இப்படத்தில் மலை வாழ் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

-----------------------------------------------------------------------

ADVERTISEMENT

"அருவி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். அதற்கு அடுத்து தமிழில் வாய்ப்புகள் இல்லை. நிவின்பாலி நடிப்பில் "படவேட்டு' என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது பிருத்விராஜ் நடிப்பில் "கோல்ட் கேஸ்' என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

-----------------------------------------------------------------------

நடிகர் நாசரின் மூன்று மகன்களில் கடைசி மகன் அபிஹாசன். விக்ரம் நடித்த "கடாரம் கொண்டான்'படத்தில் அறிமுகமானார். இதில் அவர் அக்ஷராஹாசன் ஜோடியாக நடித்தார். தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் "கேபிள்' சங்கர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
 
-----------------------------------------------------------------------

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். "சுட்ட கதை', "நளனும் நந்தினியும்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்திருக்கும் லிப்ரா புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

-----------------------------------------------------------------------

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் தனுஷ். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகிஉள்ளார்.

-----------------------------------------------------------------------

வெங்கட்பிரபு தொடங்கியுள்ள ப்ளாக் டிக்கெட் நிறுவனம் ஆந்தாலஜி படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது. இதனை வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் இயக்குகின்றனர்.

-----------------------------------------------------------------------

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறார் பிரியா வாரியர். விதவிதமான புகைப்படங்களால் தினமும் வலைதளத்தை ஆக்கிரமிக்கிறார். ஏராளமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ள நடிகையாகவும் இருக்கிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் விடியோக்களும் வைரலாகி வருகின்றன.

-----------------------------------------------------------------------

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையப்படுத்தி, வடசென்னையைக் களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ""இது போன்ற அற்புதமான சிறந்த விளையாட்டுப் படத்தை நான் ஒப்பு கொள்ளாமல் இருந்தால் வருத்தப்பட்டிருப்பேன்'' என சுட்டுரையில் தெரிவித்துள்ளார் ஆர்யா. 

-----------------------------------------------------------------------

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT