தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: திரும்பத் திரும்ப கட்டி 

எஸ். சுவாமிநாதன்


வந்தால்...!என்னுடைய மகளுக்கு வலது கால் முட்டி பின்புறம் சிறிய உருண்டையாகக் கட்டி ஒன்று உருவானது. அறுவைச் சிகிச்சை மூலம் கட்டியை நீக்கிய பிறகும் திரும்பத் திரும்ப அந்த இடத்தில் வலியும் கட்டியும் உருவாகிவிடுகிறது. மறுபடியும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறுகிறார். இப்போது கட்டி பெரிதாகி வலியும் அதிகமாய் இருக்கிறது. எல்லா வீட்டு வேலைகளையும் மகளே செய்கிறாள். இந்நிலையில் இதை எப்படிக் குணப்படுத்துவது?
முத்தையா, ஆலங்குளம்.
பொம்மை செய்பவர்கள் ஆமையோடு, யானைப்பல், மான் கொம்பு போன்றவற்றை ராவும்போது, கீழ் உதிரும் பொடிகளை மோர் விட்டு இழைத்து, விழுதைக் கட்டி ஏற்பட்டுள்ள பகுதியில் தடவும் முறை முன்பு இருந்தது. அதில் வலி நன்கு குறையும்.
பழுக்கக் கூடிய கட்டியாக இருந்தால், அது சீக்கிரம் பழுத்துச் சீழ் வெளியாகும். அமுங்குபவை சீக்கிரம் அமுங்கும். புங்கை மர மட்டை, நீரடி முத்து மரப்பட்டை, இச்சிப்பட்டை, சந்தனம், செஞ்சந்தனம், எள் இவற்றைப் பாலில் வேக வைத்து அரைத்துப் பற்று போட்டு கட்டிகளைக் கரைப்பது, முன்பு கிராமங்களில் வழக்கத்திலிருந்தது. இவை கிடைத்தால், நீங்களும் முயற்சிக்கலாம். அது போலவே, ஆல், அரசு, அத்தி, இத்தித்துளிர்கள், அதிமதுரம், எள், கடுகு, சீந்திற் கொடி, கடுக்காய்த் தோல், தான்றிக்காய் தோல், நெல்லி முள்ளி இவற்றை பாலில் இட்டு வேக வைத்து, அரைத்து, நெய்விட்டு தண்ணீர் சுண்ட இழைத்துத் தடவலாம். இவற்றைச் சேகரிப்பதற்குக் கஷ்டமாக இருந்தால், நன்னாரிக் கிழங்கு, எள்ளு இவற்றைச் சமன் எடை எடுத்து பாலில் வேக வைத்து அரைத்து நெய் சேர்த்துப் பூசலாம்.
கடுக்காயை உடைத்து உள்ளே விதையை நீக்கிக் கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் ( 5கிராம்) எள், அரை ஸ்பூன் சந்தனத்தூள், அருகம்புல் 10-12 இவற்றைச் சேகரித்து, சீந்திற் கொடியின் இலை கிடைத்தால் அதையும் சேர்த்து, 100 மி.லி. பாலில் போட்டு இளந்தீயில் வேக வைக்கவும். லேகிய பதம் வரும் வரை அடிப்பிடிக்காமல் கிளறி அதை அரைத்துக் கட்டியின் மேல் வைத்துக் கட்ட, கட்டி அமுங்கி விடும். அங்குள்ள ரத்தத்திலுள்ள கெடுதி அகற்றப்படுவதால், அமுங்கினாலும் வேறு இடத்தில் கிளம்ப அது காரணமாகாது.
தசையுடன் சேர்ந்த முகம் காணாத கட்டியாக இருந்தால், உள்ளுக்கு குக்குலு திக்தகம் கிருதம் எனும் நெய் மருந்தை சுமார்15 மி.லி. காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாள்கள் சாப்பிடலாம். உணவிற்குப் பிறகு இரண்டு காஞ்ச நார குக்குலு எனும் மாத்திரையை வெதுவெதுப்பான தண்ணீருடன் சாப்பிடவும்.
ரத்தக் கட்டி போல உடைந்தால் கெட்ட ரத்தமும் சீழும் வரக் கூடிய நிலையிலிருந்தால், ரத்தம் சுத்தமாக, மருந்துகள் உள்ளுக்குச் சாப்பிடுவதும், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை லேசான மருந்து சாப்பிடுவதும் அவசியம். மதுஸ்நுஹீரசாயனம், கதிராரிஷ்டம், மஹா திக்தக பானம் முதலியவை இதற்கு ஏற்றவை.
அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தல், குளிர்ந்த நீரில் குளித்தல், சூடு ஆறிப் போன நிலையில் புலால் வகை உணவுகளை உண்ணுதல், மறுபடியும் அவற்றைச் சூடு செய்து சாப்பிடுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT