தினமணி கதிர்

ஓட்டுநர் இல்லாத கார்கள்!

என்.ஜே.

ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்கள் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகரில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்ட் நகரில் உள்ளது தானியங்கி மென்பொருள் நிறுவனமான ஆக்ஸ்போட்டிகா. இந்த நிறுவனம் தானியங்கி கார்களைத் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாகும்.

ஓட்டுநர் இல்லாத கார்களை இயக்குவது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசனை செய்து, வரும் 2021 மார்ச் மாதத்தில் சாலைகளில் இயக்கலாம் என்று சட்டப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த ஓட்டுநர் இல்லாத கார்கள் ஆக்ஸ்போர்ட் பார்க்வே ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆக்ஸ்போர்ட் பிரதான ரயில்வே ஸ்டேஷன் வரை உள்ள 15 கி.மீ. வட்டவடிவச் சாலையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளன.

இப்போது சோதனை செய்து பார்க்கப்பட்ட கார்கள் லெவல் 4 வகையிலான கார்களாகும். ஸீரோ லெவல் என்பது ஓட்டுநரால் இயக்கப்படும் கார். இந்த லெவல் 4 வகை கார் ஓட்டுநரில்லாத தானியங்கிகாராகும்.

சோதனை ஓட்டம் என்பதால் காரில் பாதுகாப்பிற்கான ஓட்டுநர் ஒருவர் இருந்திருக்கிறார். இந்தச் சோதனை இரவு, பகல் என நாள் முழுக்க நடந்திருக்கிறது. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளிலும் நடத்தப்பட்டு இருக்கிறது. பல்வேறு தட்பவெப்பநிலை உள்ள காலங்களிலும் நடத்தப்பட்டு
இருக்கிறது.

இதற்கு முன் பல்வேறு நாடுகளில் இயக்கப்பட்ட தானியங்கிக் கார்கள், ஜிபிஎஸ் அடிப்படையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கின்றன. இப்போது ஆக்ஸ்போர்ட் நகரில் நடந்த சோதனை ஓட்டங்கள் ஜிபிஎஸ் அடிப்படையில் இயக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT