தினமணி கதிர்

முகக்கவசம்... கண்ணாடி...

1st Nov 2020 06:00 AM | என்.ஜே.

ADVERTISEMENT

 

கரோனா தீ நுண்மி தொற்று நமது பழக்க வழக்கங்களை மாற்றிவிட்டது. முகக்கவசம் அணிவது இயல்பாகிவிட்டது. கண்ணில் கண்ணாடி, முகக்கவசம் என முகத்தை வெளியே காட்டாமல், நடமாடும் ஒருவர், நல்ல வெய்யில் அடிக்கும்போது சென்றால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவே மழைக்காலமாக இருந்தால்... பனிக்காலமாக இருந்தால்... மூச்சுவிடும்போது வெளியே வரும் காற்றில் உள்ள ஈரப்பதம் கண்ணாடியில் பனிபோல படிந்துவிடுகிறது. எதையும் பார்க்க முடிவதில்லை.

வானம் மேகமூட்டத்துடன் - மழை தூறிக் கொண்டிருக்கும்போது வாகனங்களில் சென்றால், வாகனம் சிறிது நின்றால் கூட போதும், கண்ணாடியில் மூச்சுக்காற்றின் ஈரப்பதம் படிந்துவிடுகிறது.

இதற்காகக் கண்ணாடியை அடிக்கடி கழற்றித் துடைக்க வேண்டும். பயணம் செய்து கொண்டிருக்கும்போது, அடிக்கடி துடைக்கவும் முடியாது. அப்படித் துடைக்கும்போது, கண்ணாடியின் மேற்பரப்பு சேதமடைந்துவிடவும் வாய்ப்புண்டு. கணினித் திரையை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைச் செய்பவர்கள், கண்ணாடியில் ஊடுருவும் ஒளியைக் குறைப்பதற்கான மேற்பூச்சு பூசப்பட்ட கண்ணாடியை அணிந்திருப்பார்கள். அடிக்கடி கண்ணாடியைத் துடைத்தால் இந்தப் பூச்சு அழிந்துவிடக் கூடும்.

ADVERTISEMENT

அப்படியானால் என்ன செய்வது? இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும்விதமாக வந்திருக்கிறது, ஒரு பனிப்படல எதிர்ப்புத் திரவம். ஃபாக்பிளாக் என்ற இந்தத் திரவத்தை மூக்குக் கண்ணாடியில் ஸ்பிரே செய்துவிட்டால் போதும், அடுத்து 24 மணி நேரத்துக்கு கண்ணாடியில் பனிபோல மூச்சுக் காற்று படியாது.

மூக்குக் கண்ணாடியில் மட்டுமல்ல, வெல்டிங் வேலை செய்பவர்கள் அணியும் முகக்கண்ணாடியிலும் கூட இந்தத் திரவத்தைப் ஸ்பிரே செய்யலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT