தினமணி கதிர்

பேல்பூரி

10th May 2020 04:22 PM

ADVERTISEMENT

கண்டது

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

முன்சிறை

ச.ஜான்ரவி, கோவில்பட்டி.


(திருநெல்வேலி பெருமாள்புரத்தில் ஒரு மருந்துக் கடையின் பெயர்)

ADVERTISEMENT

கூகுள் பார்மசி

பாளை பசும்பொன், மதுரை -16.


(இராமநாதபுரத்தில்
எலும்பு முறிவுக்குக் கட்டுப்போடும் வைத்திய சாலையில்)

தொட்டுத் தொடரும் "கட்டு' பாரம்பரியம்

சே.தாசன் பீவி, கீழக்கரை.


(காரைக்கால் அருகில் உள்ள நல்லூத்தூர்கிராமத்தில் ஒரு வீட்டின் பெயர்)

வாழ வந்தவர்கள் இல்லம்.

சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

 

கேட்டது

(சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள தேநீர்க் கடையில் இருவர்)

""உப்பு விற்கப் போனா மழைபெய்யுது, மாவு விற்க போனாகாத்தடிக்குது... என்ன செய்றதுன்னே தெரியலை மச்சான்''
""இப்படி புலம்பிட்டு இருக்கக் கூடாது மாப்ள... ரெண்டையும் சேர்த்து போண்டாவா
போட்டு வித்துட்டு போய்ட்டே இருக்கணும்''

ப.வைரவநாதன், கூடுவாஞ்சேரி.

 

(கோவை நஞ்சுண்டாபுரத்தில் ஒரு வீட்டின் அருகே இருவர்)

""என்ன மாப்ள... இன்னும் 10 நாள் லாக்டவுனாம்''
""ஆமாம் டா மாப்ள... இன்னும் 100 நாள் கூட விடட்டும். அதுக்கு முன்னாடி அந்த சலூன் கடைய மட்டும் திறக்க சொல்லணும்''
""ஏன்டா மாப்ள?''
""இல்லை டா. எங்க வீதிக்குள்ளயே என்ன அடையாளம் தெரியாம யாருனு கேட்குறாங்க''

கரு. செந்தில்குமார், கோவை -32


யோசிக்கிறாங்கப்பா!

முன்பெல்லாம்தும்மினா "ஆயுசு நூறு'ம்பாங்க!
இப்போ தும்மினாஅல்பாயுசுங்கிறாங்க...
கரோனா வாழ்க...

அ.பூங்கோதை, செங்கல்பட்டு.

மைக்ரோ கதை

காலையிலேயே, சண்டையை ஆரம்பித்தாள் மனைவி. "எதுக்கெடுத்தாலும் சண்டை மாட்டி இழுக்கறாளே. இவ அப்பா, அம்மா கிட்டப் பேசிட வேண்டியதுதான்'... ஆவேசமாகப் புறப்பட்ட கணவன், மாமனார் வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்தி உள்ளே நுழைந்தான்.

சமையல் பாத்திரம் ஒன்று வேகமாய் அவன் மேல் வந்து விழுந்தது. பதறி ஓடினான்.

"மாமனார் மாமியார் இருவருக்கும் அப்படியொரு சண்டை'.

இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்துத் தோற்ற அவன், ""இது அவ பரம்பரை வியாதிதான் போல'' முணுமுணுத்தபடியே வெளியேறினான்.

பூபதி பெரியசாமி,
புதுச்சேரி-9


உறவு என்பது புத்தகம் மாதிரி...
தவறு என்பது ஒரு பக்கம்.
ஒரு பக்கத்திற்காக ஒரு புத்தகத்தையே கிழித்துவிடாதீர்கள்.

எஸ்.கார்த்திக் ஆனந்த்,
காளனம்பட்டி.


அப்படீங்களா!

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முகக் கவசம் அணிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. சுற்றுப்புறத்தில்- காற்றில் உள்ள வைரûஸ நாம் சுவாசிக்காமல் தடுக்க முகக் கவசம் பயன்படுகிறது என்பது உண்மையே. ஆனால் முகக் கவசத்தில் ஒட்டிக் கொண்ட வைரûஸ நாம் அணியும் சாதாரண முகக் கவசத்தால் எதுவும் செய்ய முடிவதில்லை.
பிரிட்டனில் உள்ள காரிங்டன் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு மையமான பின்கிராஃப்ட் தயாரித்துள்ள முகக்கவசம் அதில் படியும் வைரஸ்களை அழித்துவிடுகிறது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக வைரûஸத் தடுக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அந்த நிறுவனம் இந்த முகக்கவசத்தைத் தயாரித்திருக்கிறது. சுற்றுப்புறத்தில் உள்ள வைரஸ்கள் எந்தத் திசையில் இருந்து வந்தாலும் அதைத் தடுத்துவிடுகிறது.
காற்றில் பரவியுள்ள நீர்த்துளிகளில் படிந்திருக்கும் வைரûஸ - அந்த நீர்த்துளி மனித முடியை விட 15 மடங்கு மெல்லியதாக, சிறியதாக இருந்தாலும் - கண்டுபிடித்து அழித்து
விடுகிறது இந்த முகக் கவசம். அப்படி அழிப்பதற்கு இந்த முகக் கவசத்தில் வைரஸ் அழிப்புப் பொருள்களைப் பூசியிருக்கிறார்கள்.
இந்த முகக்கவசத்தை துவைத்து மீண்டும் பல முறை பயன்படுத்தலாம். இதன் மீது படிந்த 96 சதவீதம் வைரஸ்களை இது அழித்துவிடும் திறன் வாய்ந்தது.

என்.ஜே., சென்னை-58.

ADVERTISEMENT
ADVERTISEMENT