தினமணி கதிர்

கடி

10th May 2020 04:13 PM

ADVERTISEMENT


""சார் அவசரமா ஒரு நூறு ரூபாய் கைமாத்து தர முடியுமா சார்?''
""இல்லப்பா... கையில நான் பணமே வச்சுக்கிறதில்லப்பா''
""பையில இருந்தாலும் குடுங்க சார்... 
பரவாயில்லை''

வி.ரேவதி, தஞ்சை.

 

""நீ கொடுத்து வைச்சவள்டி... எங்க போனாலும் உன் கணவர் கூடவே வருகிறார்டி''
""அட... நீ வேற... அவர் சந்தேகப் பிராணிடி''

ADVERTISEMENT

எஸ்.சீதாராமன், திண்டிவனம்.

 

""மச்சி... என் ஆளு என்னை ஆயிரத்தில் ஒருவன்னு சொன்னாளே''
""உண்மையாவா மச்சி?''
""அவ வாட்ஸ் அப்புக்குள்ள போனப்பதான் அவ சொன்னது உண்மைன்னு தெரிஞ்சது''

உ.அப்துல் ஹாதி, கடையநல்லூர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT