தினமணி கதிர்

வீடியோவே கதி!

22nd Mar 2020 03:23 PM

ADVERTISEMENT

சீனாவில் கரானோ வைரஸ் தாக்குதலினால் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும்படி ஆகிவிட்டது. என்னதான் செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்த மக்கள், செல்பேசிகளிலும், தொலைக்காட்சிகளிலும் நீண்ட, குறுகிய வீடியோக்களை பார்த்திருக்கின்றனர்.
 ஏகப்பட்ட தொலைக்காட்சி சீரியல்கள், குறுந்தொடர்கள் மட்டுமல்ல, நிறைய செய்திகளையும் அவ்வப்போது தெரிந்து கொண்டனர். இதனால் வீடியோ தயாரிக்கும் நிறுவனங்களின் வேலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இளம் வயதினர் என்றில்லை எல்லா வயதுப் பிரிவினரும் இந்த வீடியோக்களில் மூழ்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
 ஆதவன், சென்னை-19
 

ADVERTISEMENT
ADVERTISEMENT