காலை வேளையில் நான்கு மருத்துவர்கள் ஒன்றாக நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். நடைப்பயிற்சி முடித்ததும் ஒரு தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிந்தனர். அப்போது தூரத்தில் ஒருவர் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஒரு மருத்துவர் சொன்னார்:
" அவருக்குக் காலில் சுளுக்கு''
இன்னொரு மருத்துவர் சொன்னார்: " அவருக்கு இடது பாதத்தில் பித்தவெடிப்பு இருக்கு. அதான் நொண்டி நொண்டி வர்றார்''
இரண்டு மருத்துவர்கள் சொன்னதையும் மூன்றாம் மருத்துவர் மறுத்தார்.
"ரெண்டு பேரும் சரியாகக் கவனிக்கவில்லை. அவருக்கு இடது கால் முழங்கால் மூட்டு தேய்ந்துவிட்டது. அதுதான் நொண்டி நொண்டி நடக்கிறார்'' என்றார். நான்காவது மருத்துவரோ, " அவருக்கு பக்கவாத பாதிப்பு இருக்கலாம்'' என்றார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த நபர் அருகில் வந்துவிட்டார்.
"எக்ஸ்யூஸ் மீ ... இங்க பக்கத்துல செருப்புத் தைக்கிறவர் யாராவது இருக்காங்களா?''
" எதுக்குக் கேக்றீங்க?''
" ஒண்ணுமில்லை... என் இடது கால் செருப்பு அறுந்திடுச்சு... தைக்கணும்'' என்றார்.
பால.கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம்.