தினமணி கதிர்

குறுந்தகவல்கள்

22nd Mar 2020 03:22 PM

ADVERTISEMENT

• இந்திய காப்புரிமைச் சட்டம் கடந்த 1957- ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிறகு அந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் புத்தகம் டாக்டர் ராஜேந்திர பிரசாத் எழுதிய "சுயசரிதம்' ஆகும். 

• சு.சமுத்திரம் என் நண்பர். அவர் ஒரு நாள் புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு என்னிடம் புத்தகக் கண்காட்சியில், "உன் புத்தகங்கள் நிறைய விற்பனையாகின்றன. நீ என்ன அவ்வளவு மோசமாகவா எழுதுகிறாய்' என்று கேட்டார். ஒரு நூல் அதிகமாக விற்க வேண்டும் என்றால் மோசமாக எழுத வேண்டும் என்பது போல் அவர் கேட்டார். அந்தக் கால நிலைமை அப்படி.

• இன்றைய வெற்றிப்பட இயக்குநர் ஷங்கர் ஒரு காலத்தில் ராமதாஸின் நாடக மன்றத்தில் இருந்தவர். இதன் காரணமாக அவர் இயக்கிய "முதல்வன்' படத்தில் சிறு காட்சியில் நடிக்கும் வாய்ப்பை ராமதாசுக்கு வழங்கியிருந்தார். 
- தென்கச்சி சுவாமிநாதன் கூறியது.
நெ.இராமன், சென்னை.

ADVERTISEMENT
ADVERTISEMENT