தினமணி கதிர்

லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

8th Mar 2020 05:57 PM

ADVERTISEMENT


தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன், சில  வருடங்களாக புதுப்படத்தில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் "லாபம்' படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறார். இதற்கிடையே தன் அழகை மெருகேற்ற முகத்திலும், மூக்கிலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இது பற்றி அவர் சமீபத்தில் பேசும் போது...  ""நான் குண்டாக இருக்கிறேன், ஒல்லியாக மாறிவிட்டேன் என்று என்னைப் பற்றி வரும் தகவல்கள் தவிர்க்க முடியாதது. ஹார்மோன்கள் மாற்றத்துக்கு ஏற்பவே நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மாறியிருக்கிறேன். சமீபத்தில் நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களை ஏற்க கற்றுக் கொள்ளுங்கள். அன்பைப் பரப்பி மகிழ்ச்சியாக இருங்கள். நடிகையான எனக்கு அழகுப் பாராமரிப்பு தேவை என்பதையும் உணருங்கள்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT