தினமணி கதிர்

பேல்பூரி

8th Mar 2020 05:28 PM

ADVERTISEMENT

கண்டது

(சென்னை குமரன் நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற ஓர் ஆட்டோவின்  பின்புறத்தில்)

கை ஏந்துங்கள் அன்புக்கு
கை கொடுங்கள் அன்புக்கு

வண்ணை கணேசன், சென்னை-110

 

ADVERTISEMENT

(நாகப்பட்டினம் கடைவீதியில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

தொப்பி வாப்பா
எம்.ஆர்.முத்துக்குமார், தாணிக்கோட்டகம்.
(பட்டுக்கோட்டையில்  ஒரு முடித்திருத்தகத்தில்)
சிகைக்குச் சிக்கலில்லாமல் மருத்துவம் பார்க்கப்படும்.

டி.ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை.

 

(ஹைதராபாத் - குக்கட்பள்ளியில் ஓர் ரெஸ்டாரண்டின் பெயர்)

பிளாட்பாஃம் 65

வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்-9

 

கேட்டது

(கோபிசெட்டி பாளையத்தில் இளைஞர்கள் இருவர்)

""ஏன்டா  நேத்து லேட்டா வந்தே சரி... இன்னிக்கும் எதுக்குடா லேட்டா வந்தே?  சார் கேரக்டர் 
பத்திதான் தெரியும்ல... பத்துமணிக்கு வர வேண்டியதுதானே?''
""நேத்து அவர்தான்டா சொன்னார்... நாளைக்கும் பத்தரைக்கு வா... கம்பெனி உருப்பட்ரும்னு''
க.சங்கர், கோபிசெட்டிபாளையம். 

 

(மண்ணச்சநல்லூர் கடைவீதியில் 50 வயது மதிக்கத்தக்க கணவரும் 
அவருடைய மனைவியும்)

""நான் சொன்னது மட்டும் நடக்கலைன்னா... என்னை நீ செருப்பாலேயே அடிக்கலாம்''
""ஒவ்வொரு தடவையும்  இப்படித்தான் சொல்றீங்க.  அப்படிப் பார்த்தா மாசத்துக்கு நாலைஞ்சு தடவை உங்களை...''

ஆர்.தனம்,  திருச்சி-2.

 

யோசிக்கிறாங்கப்பா!


சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை...
வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்கு
தோல்வியே இல்லை. 

கோ.பெ.இளந்திரையன், சென்னை-116.

 

மைக்ரோ கதை


""ஏங்க... இன்னைக்கு உங்க நண்பர் பாலன் மகள் திருமணம் இருக்கே...  போகலையா?''
"" நமக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருக்கும் திருமணமாயிடுச்சு... இன்னமும் எதற்கு எல்லா கல்யாணத்துக்கும் போய்க்கிட்டு? செலவா?''
""ஏங்க ரொம்பவும் நெருங்கிய நண்பராச்சே.... எங்காவது பார்த்தா சங்கடமா இருக்காதா?''
""அப்ப... ஏதாவது பொய் சொல்லி சமாளிச்சுக்கலாம்''
சோமுவும் அவர்  மனைவி மாதவியும் இப்படிப்   பேசிக் கொண்டிருக்கும்போதே போன் வந்தது. 
பாலன்தான் பேசினார்:
""சோமு... என் பாட்டி இறந்து போச்சுடா... 
கல்யாணத்தைத் தள்ளி வைச்சாச்சு''
சோமு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார்.  ""ஏன்?'' என்று கேட்டாள் மாதவி.
""பாலனடோ பாட்டி இறந்துட்டாங்க.  நல்லதுக்குப் போகலைன்னாலும் பரவாயில்லை... கெட்டதுக்குப் போய் ஆகணுமில்ல?'' என்றார் சோமு.

இரா.சிவானந்தம், கோவில்பட்டி. 

 

எஸ்.எம்.எஸ்.

கொக்கைத் தேடி
குளம் வராது...
குருவியைத் தேடி 
பழம் வராது!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.


அப்படீங்களா!

செல்பேசிக்கு அடிமையாவது நமது நாட்டில் மட்டும்தான் என்று நினைத்துவிடாதீர்கள். இந்தோனேசியாவிலும் இந்த அடிமைத்தனம் அதிகம். ஒருநாளைக்கு  குறைந்தது எட்டு மணி நேரம் செல்பேசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்கள் அங்கே இருக்கிறார்கள்.  காலை எழுந்தவுடன் படிப்பு என்பது போய்  செல்பேசியும் கையுமாக விடிகிறது பலருக்கு.  ஆன்லைன் விளையாட்டுகளில்  பலர் மூழ்கிக் கிடக்கிறார்கள்.  இந்த நிலையை மாற்ற ஒருவர் விரும்பினால்,  யுனிவர்சிட்டி ஆஃப் இந்தோனேசியாவைச் சேர்ந்த  இர்ஃபான் படி சட்ரியா என்ற மாணவர் ஒருவர் கண்டுபிடித்து இருக்கும் சஉபபஞல என்ற கருவியைப் பயன்படுத்தினால் போதும்.  

அந்தக் கருவியை கைக்கடிகாரம் கட்டும் இடத்தில் அணிந்து கொள்ள வேண்டும். அந்தக்  கருவியில் நாடித்துடிப்பை வைத்து உடலின்நிலையைக் கண்டுபிடிக்கும் சென்சார் உள்ளது. ஒருவர் செல்போனில் மூழ்கிக் கிடக்கும்போது,  அவருடைய  இதயத் துடிப்பு கூடவோ குறையவோ செய்கிறது.  ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவிலும் அதனால் மாற்றம் ஏற்படுகிறது.  இதை இந்தக்   கருவி கண்டறிந்து,  தேவையான அளவை விட இதயத்துடிப்பு குறைந்தாலோ, கூடுதலானாலோ உடனே  ""போதும்ப்பா நிறுத்து'  என்று கேட்டுக் கொள்ளும். இப்படியே படிப்படியாக செல்பேசிச் சிறையிலிருந்து வெளியே வரலாம். 

ஆனால் செல்பேசி அடிமைத்தளையிலிருந்து விடுபட வேண்டும்; உடல்நலத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மட்டுமே இந்தக் கருவியின் எச்சரிக்கையைக் காது கொடுத்துக் கேட்பார்கள்.   

என்.ஜே., சென்னை-58.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT