தினமணி கதிர்

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் அஞ்சலி 

8th Mar 2020 05:31 PM

ADVERTISEMENT


தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மீண்டும் ஒரு படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டது. இந்தப் படத்தை போயபதி இயக்குகிறார். ஆனால் படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என நயன்தாரா கூறிவிட்டார். அவருக்கு முன்பாக ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடம் பேசினார்கள். "லிங்கா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடித்திருந்தார். அதனால் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் நடிக்க அவர் சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நயன்தாராவைத் தொடர்ந்து அவரும் இதில் நடிக்க மறுத்துவிட்டார். இந்தநிலையில் இதில் அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ""நயன்தாரா, சோனாக்ஷிக்கு அதிக சம்பளம் தர வேண்டிய நிலை இருந்தது. இப்போது அஞ்சலி நடிப்பதால் சம்பள பிரச்னை கிடையாது. அவர் ஏற்கெனவே பாலகிருஷ்ணாவுடன் நடித்திருப்பதால் இதில் அவர்களின் ஜோடி கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகும்'' என படக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT