தினமணி கதிர்

சிரி... சிரி... சிரி... சிரி...

8th Mar 2020 05:10 PM

ADVERTISEMENT

""பீட்ரூட்டை பச்சையா சாப்பிடச் சொல்றீங்களே... என்னாலே முடியாது டாக்டர்''
""ஏன் அப்படிச் சொல்றீங்க?''
""பீட்ரூட் சிவப்பாதான் கெடைக்குது''

பானுமதி, சென்னை-10.""பால் கெட்டுப் போகாம இருக்க என்ன செய்யணும்?''
""மிச்சம் வைக்காமல் குடிக்கணும் சார்''

டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

ADVERTISEMENT""மன்னரைப் புகழ்ந்து பாடிய எனக்கே 100 பொற்காசுகள்தாம் கிடைத்தன. உனக்கு எப்படி 200 பொற்காசுகள் கிடைத்தன?''
""நான் மகாராணியைத் திட்டிப் பாடினேன்''

ஆர்.கிருத்திக்குமார், நெய்வேலி.""திறப்பு விழாவுக்குப் போன தலைவர் ஏன் கோபமாயிட்டாராம்?''
""நீச்சல்குளம் திறப்புவிழாவுல தலைவர் நீச்சல்குளத்தைத் திறந்து 
வச்சதும் அவரை அதில்  தள்ளிவிட்டு முதல் நீச்சல் அடிக்க 
வைச்சிட்டாங்களாம்''

பி.பரத், கோவிலாம்பூண்டி.


""உங்க ரெண்டு பேர் சண்டையில் மூன்றாவதா ஒரு குரல் கேட்டுதே?''
""அது நெறியாளர் குரல்''

ஏ.நாகராஜன், பம்மல்.""ஏங்க நான் போட்ட காபியைக் குடிச்சுட்டு உங்க நண்பர் என்ன சொன்னார்?''
""இதெல்லாம் குடிச்சிட்டு 
எப்படிடா உயிர் வாழ்றேன்னு ஆச்சரியப்பட்டான்''

    செ.ரா.ரவி, செம்பட்டி.


""பேரண்ட்ஸ் மீட்டிங் போனதுக்குப் பிரம்படி வாங்கினீங்களாமே... ஏன்?''
"" பசங்களுக்கு ஹோம் ஒர்க்  செஞ்சு தர்றது நான்தான்னு தெரியாமச் சொல்லித் தொலைச்சுட்டேன்''

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.


""தங்கத்தை எடை போடுகிற மாதிரி அரிசியை இவ்வளவு துல்லியமா 
எடை போடுறீங்களே?''
""எடை கூடவும் இருக்கக் கூடாது.  குறையவும் கூடாது. அதுதான் எங்கள் பாலிசி''
""நல்லவேளை அரிசிக்கு செய் கூலி சேதாரம் போடாமல் விட்டீங்களே... அதுவரைக்கும் சந்தோஷம்''

க.சரவணகுமார், நெல்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT