தினமணி கதிர்

இந்தியாவின் சிறந்த அரசுப் பள்ளி!

8th Mar 2020 05:00 PM | பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

1,32,000 சதுர அடியில் பள்ளிக்கு கட்டடம்... இருபத்தைந்தாயிரம் நூல்கள் உள்ள நூலகம்... மாணவிகள் தடகள, கால்பந்து, ஹாக்கி விளையாடி பயிற்சி பெற 18,110 சதுர அடியில் (செயற்கை மெத்தை விரிக்கப்பட்ட தடகள, பல்நோக்கு விளையாட்டு மைதானம், கூடைப் பந்து விளையாட மரத்தாலான தரைத்தளம் அமைக்கப்பட்ட 13,000சதுர அடியில் கூடைப்பந்து, இறகுப் பந்து மைதானம், அறிவியல் பாடங்களுக்குத் தனித்தனியான ஆய்வுக்கு கூடங்கள் மாணவிகள் தங்கள் புத்தகங்கள் பொருள்களை வைத்துக் கொள்ள லாக்கர் பெட்டிகள். ஒரே நேரத்தில் 600 மாணவிகள் ஒரு சேர அமர்ந்து உண்ணக் கூடிய டைனிங் ஹால்... சுத்தமான சூழ்நிலையுடன் இருக்கும் - இந்தப் பள்ளியை "கனவுப் பள்ளி' அல்லது "கற்பனைப் பள்ளி' என்று சொல்லலாம். இத்தனை வசதிகள் உள்ள பள்ளி நிஜமாகவே இருக்குமா?

கேரளம், கோழிக்கோடு நகரின் "நடக்காவு' பகுதியில் உள்ள "அரசு தொழிற்கல்வி பெண்கள் மேல்நிலை பள்ளி'தான் இந்த அதிசய பள்ளி. சிதிலமடைந்த கட்டடங்கள், அங்கு படிக்கும் 2,300 மாணவிகளுக்கு வெறும் பத்து கழிப்பறைகள் என்று இருந்த 120 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளி, இன்று முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.

உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் ரர்ழ்ப்க்'ள் ஐய்க்ண்ஹ வெளியிட்டிருக்கும் 2019-20 -ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்து இந்திய அரசுப் பள்ளிகள் அடங்கிய பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது இந்தப் பள்ளி'. அதிரடி மாற்றத்தை இந்தப் பள்ளி பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பவர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரதீப் குமார்.

"நான் 2006 - இல் சட்டமன்ற உறுப்பினரானேன். எனது தொகுதியில் வசிக்கும் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை நகரத்தின் முன்னணி தனியார் பள்ளி
களில் சேர்க்க எனது பரிந்துரைக்கு வருவார்கள். "இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்' , "இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' போன்ற அரசுக் கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களாக மாறியிருக்கும் போது, அரசுப் பள்ளி ஏன் தரத்தில் சிறந்து நிற்க முடியாது என்று யோசித்தேன். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வளர்ச்சி நிதியின் ஒரு பகுதியைப் பள்ளிக்காகச் செலவிட முடிவு செய்தேன். மேலும் தேவைப்படும் நிதிக்கு ஆர்வலர்களிடத்தில் நிதி திரட்டினேன்.

ADVERTISEMENT

எனது முயற்சிகளுக்கு கேரள அரசும், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும், கோழிக்கோட்டில் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அரசு கல்வி நிறுவனங்களின் வழிகாட்டல்களுடன் தனியார் நிறுவனங்களின் நிதி உதவிகளும் இந்தக் கனவை நனவாக்கின. குறிப்பாக ஃபைசல் மற்றும் ஷபானா அறக்கட்டளை பதினைந்து கோடி நிதி உதவி செய்துள்ளது. “

இப்போது பள்ளியில் இருக்கும் கழிப்பறைகள் 92 . பள்ளியின் உள்கட்டமைப்பினை மேம்படுத்திவிட்டால் மட்டும் பள்ளியின் தரம் கூடிவிட்டது என்று சொல்ல முடியாது. ஆசிரியர்களின் திறமைகளையும் மேம்
படுத்த வேண்டும். அதற்காக பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் கோழிகோடு இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் வழியாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பலனை மாணவர்கள் நல்ல தரமான கல்வி மூலமாக அறுவடை செய்கிறார்கள்'' என்கிறார் பிரதீப்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT