தினமணி கதிர்

பேல்பூரி

14th Jun 2020 06:52 PM

ADVERTISEMENT

கண்டது


(மதுரை பழங்காநத்தத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றின் பின்புறம் எழுதப்பட்டுள்ள வாசகம்)

லிஃப்ட் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை!  

ச.ஷகிலா பானு,
தூத்துக்குடி- 1.

 

ADVERTISEMENT

(விராலிமலை அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

தேங்காய் தின்னிப் பட்டி

ஜே.மகரூப், குலசேகரன்பட்டினம்.

 

(மதுரையில் ஓடும் ஆட்டோ ஒன்றின் பெயர்)

மனிதன்

இரா.சக்கரபாணி, மதுரை-7

 

கேட்டது


(சென்னை ஆவடியில் உள்ள சூப்பர் மார்க்கெட் வாசலில்  ஒரு பெண்ணும், ஒரு  மனநல மருத்துவரும்)

""டாக்டர் சாயந்தரம் எத்தினி மணிக்கு  உங்க கிளினிக்கைத் திறப்பீங்க.. என் வூட்டுக்காரரை இட்டுன்னு வரணும்''
""எதுக்கு?''
""எங்க வூட்டுக்காரர் டிவியை போட்டுக்கினு சேனல் சேனலா மாத்திக்கினே இருக்காரு. அதான்''
""லாக் டௌன் சமயத்துல எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க...அவரு நார்மலாத்தான் இருக்கார்''
""அந்தாளு சேனல் சேனலா மாத்தி விளம்பரத்தைப் பார்த்துக்கினு இருக்காரு சார்.''
வி.சீனிவாசன்,  திருமுல்லைவாயில்.
(தெங்கம்புதூர் ஜங்ஷனில் 
இரு நடுத்தர வயது நபர்கள்)
""என்ன மாப்ள...அக்கா பயங்கரமா திட்டிட்டு இருந்தாங்க... யாரை அப்படித் திட்டுனாங்க?''
""என்னைத்தான் மச்சி''
""அப்புறம், நீரு ஏன் எதுவும் 
பேசாமல் , அமைதியா இருந்தீர்?''
""நான் பேசினேன்னா... என்னைத்தான் திட்டுறானு சொல்லி, பக்கத்து வீட்டுக்காரங்க நெனைப்பாங்க; அமைதியா இருந்தால் , பையனைத் திட்டுறான்னு  நினைச்சிடுவாங்கல...''
""நீரு சொல்வதை பார்த்தால், இன்னும் தரை லெவலுக்கு, உன்னை திட்டுவாங்கன்னு நெனைக்கிறேன்''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

 

யோசிக்கிறாங்கப்பா!

புகழ் - நல்லவனை மேலும் நல்லவனாகவும்,
கெட்டவனை மேலும் கெட்டவனாகவும், ஆக்குகிறது.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.


மைக்ரோ கதை


அந்த ஏடிஎம்மில் எனக்கு முன்னே பணம் எடுத்துக் கொண்டிருந்தவர் ஒரு ஐநூறு ரூபா தாளை கீழே தவறவிடுகிறார். நான் கவனித்ததை அவர் கவனிக்கவில்லை. இந்த ஊரடங்கில் காய்ந்து  கிடக்கும் எனக்கு மனது பாடாய்படுத்தியது. ஒருவழியாய் பேப்பர் எடுப்பது போல் அந்த ரூபாய் தாளையும் எடுத்துவிட்டேன்.

பணத்தை எண்ணியவாறு  அந்த நபர் திரும்பி என்னை நோக்கி வந்ததும் பாடாய்ப்படுத்திய மனசு படபடத்தது, 

""சார்... யாரையும் நம்பமுடியலே... இந்த மிஷின்கூடவா துரோகம் செய்யும்?  பயிருக்கு பூச்சி மருந்து வாங்கணும். பணம் குறையுதே... இப்ப என்ன பண்றது னே தெரியலேயே?'' என புலம்பியவரிடம், 

""கவலைப்படாதீங்க... வேர்வை சிந்தி சம்பாதிச்ச, அதுவும் விவசாய காசு. கண்டிப்பா கிடைக்கும். உள்ளே மிஷின்ல சிக்கியிருக்கும்... நான் பார்க்கிறேன்'' என மிஷினிலிருந்து எடுப்பது போல் மறைத்து வைத்திருந்த அந்த ஐநூறு ரூபா தாளை தந்தபிறகு தான் என் மனசு லேசானது! 

பா. து. பிரகாஷ்,  தஞ்சாவூர் -1.


எஸ்.எம்.எஸ்.


நமக்கானது எதுவும்
நம்மைவிட்டுப் போகாது...
நம்மை விட்டுப் போனா
அது நமக்கானது அல்ல.

நெ.இராமன், சென்னை-74.

 

அப்படீங்களா!

சூரியனை நோக்கி தன்னைத் திருப்பிக் கொள்ளும் சூரியகாந்திப்பூவை எல்லாருக்கும் தெரியும்.  அந்த சூரியகாந்திப் பூவை போல ஒளி உள்ள திசையை நோக்கித்  திரும்பும் உலோகத் தடி (ள்ன்ய்க்ஷர்ற்ள்) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.  சூரிய ஒளிக்காக மட்டுமல்லாமல்,  லேசர் ஒளி போன்றவற்றுக்கும் கூட  இந்த உலோகத்தடி தன்னை வளைத்துக் கொண்டு திரும்புகிறது.  ஒருவித நானோமெட்டீரியலாலும், பாலிமராலும் இந்தத் தடி செய்யப்பட்டுள்ளது.  

ஏற்கெனவே உள்ள  சோலார் பேனல்கள் எந்த அசைவும் இல்லாமல், நிலையாக இருப்பவை.  சூரியஒளி அதன் மேல் எந்த அளவுக்குப் படுகிறதோ அந்த அளவுக்கு மட்டுமே - ஏறத்தாழ 22 சதவீதம் சூரியஒளியை மட்டுமே - உள்வாங்கி 
மின்சாரம் தயாரிப்பவை.  

சில சோலார் பேனல்களை சூரிய ஒளிக்கு ஏற்ப திரும்பும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.  ஆனால் அவற்றை ஒளியின் திசைக்கேற்ப  திரும்ப வைப்பதற்கு நிறைய மின்சக்தியைச் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த  உலோகத் தடியைப் பயன்படுத்தி சூரிய ஒளி  மின்சாரத்தைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டால்,  அதிகமான சூரிய ஒளியைப் பயன்படுத்த முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

என்.ஜே.,  சென்னை-58.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT