தினமணி கதிர்

திரைக்கதிர்

14th Jun 2020 07:02 PM | ஜி.அசோக்

ADVERTISEMENT


5 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த படம் "ப்ரேமம்'. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய படம். இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ் உருவாக்கம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இது குறித்து பேசிய அல்போன்ஸ், இந்தக் கதையில் நடிப்பதற்கு தகுதியான ஆள் தனுஷ்தான் என்று தெரிவித்துள்ளார். "அவரால் மட்டுமே மூன்றுவிதமான தோற்றங்களில் அசத்த முடியும்' என்றும் கூறியுள்ளார்.

 

தற்போது தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் "புஷ்பா' என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா 5 வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறாராம்.
 

ADVERTISEMENT

"முத்து' படத்தில் சரத்பாபு நடித்த வேடத்தில் முதலில் ஒப்பந்தமானவர் ஜெயராம். பின்னர் அவர் இப்படத்திலிருந்து விலகினார். ""முத்து படத்தில் ரஜினியை அடிப்பது போல் காட்சி இருந்தது. அவ்வாறு அடித்தால் ரஜினி ரசிகர்கள் கோபப்படுவார்கள் என்பதால் அதில் நடிக்க மறுத்தேன்'' என்று தற்போது ஜெயராம் தெரிவித்துள்ளார்.
 

சிம்பு திருமணம் பற்றிய வதந்திக்கு அவரது குடும்பமே விளக்கம் அளித்துள்ளது. செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என டி. ராஜேந்தரும் , உஷாவும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற "அசுரன்' படம், தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தக் கதை நாடு தாண்டி செல்கிறது. ஆம். சீன மொழியில் இது ரீமேக் ஆகும் என தெரிகிறது. ஏற்கெனவே தமிழில் வெளியான "பாபநாசம்' சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டு, வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. அது போலவே, "பிகே', "பாகுபலி', "மாம்' படங்களும் அங்கே வெற்றிப் பெற்ற இந்தியக் கதைகள் ஆகும்.

எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கி வரும் படம் "மூக்குத்தி அம்மன்'. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஊர்வசி, மௌலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக நீண்ட இடைவெளிக்குப் பின் பின்னணி பாடகி எல். ஆர். ஈஸ்வரி "மூக்குத்தி அம்மனுக்குப் பொங்கல் வைப்போம்' என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். பொது முடக்கம் முடிந்ததும் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT