கேஷ்பாபுதனது தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் "சரிலேருநீக்கெவரு'.இந்தப் படத்துக்குப் பின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இப்போது புதிய படத்தின் பெயராக "சர்காரு வாரி பாட்டா' என வைக்கப்பட்டுள்ளது. பரசுராம் இயக்குகிறார்.
சமூகவலைதளங்களில் தீவிரமாக இருக்கும் சமந்தாவின்இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக, சமந்தா 10 தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி அளித்துள்ளார்."அற்புதமான தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி அளித்துள்ளேன். அனைவருக்கும் என் அன்பு' என்று தெரிவித்துள்ளார் சமந்தா.
ஊரடங்கு காலத்தை தனது பண்ணை வீட்டில் குடும்பத்துடன் செலவிட்டுவருகிறார் பிரகாஷ்ராஜ். இயற்கை விவசாயத்தின் மீதும் அவருக்கு அதிக ஈடுபாடு உள்ளது. இயற்கையின் மீது கொண்ட ஈடுபாட்டால் சின்னத்திரையில் கால்பதித்துள்ளார். டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் "வைல்ட் கர்நாடகா' எனும் நிகழ்ச்சிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வர்ணனை கொடுத்ததை மிகவும் சிறப்பாக உணர்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், "மணிகார்ணிகா பிலிம்ஸ்' என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துக்காக மும்பையின் பெரும்புள்ளிகள் இருக்கும் பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் ஒரு மாளிகையை வாங்கி வடிவமைத்துள்ளார். இதற்காக அவர் செலவழித்திருக்கும் தொகை 48 கோடி ரூபாய். மூன்று மாடி கொண்ட இந்த மாளிகையைப் பற்றி சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியுள்ளார் கங்கனா.
100 படங்களுக்கு மேல் நடித்தவர் யோகி பாபு. இதுவரை காமெடி கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தவர், இப்போது காமெடி கதைகளுக்கு ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அழகான மகளை பெற்ற அழகற்ற தந்தையின் கதை என்று சொல்லப்படுகிறது. கரோனா காலத்துக்குப் பின் படப்பிடிப்பு தொடங்குகிறது.