தினமணி கதிர்

சிரி...  சிரி...  

2nd Feb 2020 10:44 PM

ADVERTISEMENT

""தலைவரே போராட்டம்  முடிவில் இன்னிக்கு தீ குளிப்பேன்னு அறிக்கை விட்டீங்களே... மேடைக்கு முன் மூணு லட்சம் பேர் திரண்டிருக்காங்க''
""ஆதரவு தெரிவிக்கவா?''
""நீங்க தீக்குளிக்கிறதை செல்லில்  வீடியோவா எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்றதுக்காக''


""சமையல் சரோஜான்னு யூ டியூப்பில வீடியோ போடுறது நீங்கதானா? அந்த அளவுக்கு நல்லா சமையல் தெரியுமா?''
""ஆமாம்... என்னை வைச்சு என் கணவர் வீடியோ எடுப்பார். அவர் சொல்றபடி நான் சமைப்பேன்''

ஆர்.யோகமித்ரா, சென்னை-73.

 

ADVERTISEMENT

""பங்களாவுல  கொள்ளையடிச்சது பத்தாதுன்னு... பக்கத்துல உள்ள குடிசை வீட்டுல கூட புகுந்து ஏன் திருடினே?''
""நம்பளை யாரும் மதிக்கிறதில்லைன்னு குடிசை வீட்டுக்காரன் நினைச்சிடக் கூடாதுங்கள்ல எசமான்?''

வி.ரேவதி, தஞ்சை.

 

""ஏன்டா அவனைப் போட்டு இந்த அடி அடிக்கிறாய்?''
""நான் போட்ட எந்த மீம்ஸ்க்கும் லைக் போட மாட்டேங்கிறான்''

செ.ரா.ரவி, செம்பட்டி.

 

""மன்னரை நான்  புகழ்ந்து பாடி பரிசில் பெறவே வந்துள்ளேன்''
"" சத்தமாகப் பேசாதீர்... மன்னரே மாறுவேடத்தில் பக்கத்து நாட்டு மன்னனிடம் 
பாடி பரிசில் பெற போயிருக்கிறார்''

ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

 

""அந்த நடிகைக்குப் பாவம் இடுப்பு வலியாம்''
""எல்லாரும் கண்ணு வைக்கிறாங்கள்ல்ல... அதான்''

தீபிகா சாரதி, சென்னை-5

ADVERTISEMENT
ADVERTISEMENT