மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான "நீனா' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தீப்தி சதி. தற்போது தமிழுக்கு வந்துள்ள இவர் "நானும் சிங்கிள்தான்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படத்தின் கதாநாயகன்: "அட்டகத்தி' தினேஷ்.
---------------------------------------------------------------------------------------
"பிரேமம்' படத்தில் நடித்த சாய் பல்லவி, மடோனா செபஸ்டின் இருவரும் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கில் நானி நடிக்கும் "சியாம் சிங்க ராய்' என்கிற படத்தில் தான் இவர்கள் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
---------------------------------------------------------------------------------------
"வாகை சூடவா' படம் மூலம் அறிமுகமானவர் இனியா. பின்னர் "மௌன குரு', "சென்னையில் ஒரு நாள்', "நான் சிகப்பு மனிதன்' என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. தருண் கோபி இயக்கும் "யானை' படம் மட்டுமே தமிழில் கை வசம் உள்ள நிலையில் தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் உலவ விட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------
தராபாத்தில் "அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இவருக்கு உதவியாக அவரது மகள் ஐஸ்வர்யா கூடவே இருந்து வருகிறார்.
---------------------------------------------------------------------------------------
நேரம்', "பிரேமம்' படங்களின் மூலம் மலையாளம், தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்... ""வாழ்த்துகள் தலைவா... ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்'' என அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
---------------------------------------------------------------------------------------
020-ஆம் ஆண்டில் சுட்டுரை தளத்தில் தென்னிந்திய அளவில் முதல் பத்து இடங்களில் எந்த நடிகரைப் பற்றி, எந்த நடிகையைப் பற்றி அதிகமான பதிவுகள் பதிவாகி உள்ளன என்பது பற்றிய பட்டியலை சுட்டுரையின் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. டாப் 10 நடிகைகள் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------
தனுஷ் நடித்துள்ள "கர்ணன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கோகோவை மையப்படுத்தி உருவாகியுள்ள "கோகோ' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.