"அட்டகத்தி' நந்திதா, "ஐபிசி 376' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். காவல் அதிகாரி கதாபாத்திரம் என்றாலும் தண்ணீரில் குதிப்பதற்குப் பயந்துகொண்டு, படப்பிடிப்புக்கே வராமல் நந்திதா இரண்டு வாரம் விடுமுறை எடுத்த காமெடியும் பொது முடக்கத்துக்கு முன் நடந்துள்ளது.
--------------------------------
"நம் தோற்றத்தை மேம்படுத்த மலிவான வழி புன்னகையே' எனக் கூறும் நடிகை ஷிவானி, இந்த பொது முடக்கத்தில், விதவிதமான, அடக்கமான, கவர்ச்சியான என பலதரப்பட்ட புகைப்படங்களை எடுத்து தள்ளியுள்ளார். இதனால், புதிய பட வாய்ப்புகள் வரும் என்பது அவர் நம்பிக்கை.
--------------------------------
அதர்வா, கவுதம் கார்த்திக் போன்றோருடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் பிரியா ஆனந்த். இது குறித்து கூறுகையில், ""இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. சினிமாவில் இப்படி கிளப்பி விடுவது சாதாரணமப்பா'' என பதிலளித்திருக்கிறார்.
--------------------------------
நயன்தாரா, யோகி பாபு நடித்த "கோலமாவு கோகிலா' படம் விரைவில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.ரேடியோ ஜாக்கியாக இருந்து இயக்குநராக அறிமுகமான மயூரா ராகவேந்திரா தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். பிரபல சீரியல் நடிகை ரச்சிதா ராம் தான் நயன்தாரா நடித்த பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
--------------------------------
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் "மாநாடு' படத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
--------------------------------
"மாஸ்டர்' படத்தை அடுத்து, "முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் நடிக்கும் சாந்தனு, "ராவண கோட்டம்' படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.
--------------------------------
பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு பற்றி பேசி இருந்தார். அதில் சிம்பு ஒரு சுயம்பு என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சிம்பு தன்னைப் பற்றி இப்படி பேசிய பார்த்திபனுக்கு நன்றி கூறும் விதமாக ஒரு மலர்க் கொத்தை அவருக்கு தனது உதவியாளர் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.