ரஜினிக்கு குஷ்பு, மீனா என இரண்டு முறைப் பெண்கள். இருவரையும் திருமணம் செய்யாமல் வேறொரு பெண்ணை ரஜினி திருமணம் செய்வதாகவும், அந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இந்தநிலையில் குஷ்பு, மீனா இருவரும் கீர்த்தி சுரேஷை மருமகளாக்க போட்டி போடுவதுதான் "அண்ணாத்த' படத்தின் கதை என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு நிலவுகிறது.
"பேட்ட' , "மாஸ்டர்' படங்களில் நடித்துள்ளவர் மாளவிகா மோகனன். அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகளுக்காக தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்த நிலையில் விரைவில் நடிகர் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க தான் விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார் மாளவிகா.
தன் வாழ்வின் சிறந்த, "போட்டோ ஷூட்' புகைப்படம் எனக் கூறி, கவர்ச்சிப் படம் ஒன்றை, இலங்கை நடிகையும், மாடல் அழகியுமான பியூமி ஹன்சமாலி சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். அவருக்குத் தமிழில் பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டும் நடிக்க விருப்பமாம். அதற்காக விரைவில் சென்னை வர காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், "வீட்டின் மொட்டைமாடி, பால்கனி, ஜன்னல் போன்ற எந்த இடத்தையும் தோட்டமாக மாற்றலாம். இதனால் வீட்டின் தேவைகள் சிறிய அளவில் பூர்த்தியாகும். இன்னொரு பொது முடக்கம் வந்தால், கடை வீதிக்குச் சென்று, பீதியை வாங்கி வராமல் இருப்போம்' என்று தெரிவித்துள்ளார்.
ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கும் இன்னும் பெயர் வைக்காத படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராக உள்ளது. 1964-ஆம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக இப்படம் உருவாகவுள்ளது.
தெலுங்கில் "பிக்பாஸ் சீசன் 4'-க்கான டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஸ்ரத்தா தாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்கிற செய்தி வெளியானது. அதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்ரத்தா தாஸ் அதனைக் கடுமையாக மறுத்துள்ளார். அவர் அனுமதி பெறாமல் அவருடைய பெயரை பட்டியலில் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் அசங்கான் மகுலி காட்டில் மலையேற்றப் பயிற்சியில் இருப்பது மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை தமன்னா. காட்டில் நடந்து செல்லும் படத்தைச் சுட்டுரையில் பகிர்ந்துள்ள அவர், "இயற்கையில் தொலைந்து போங்கள். நீங்களே உங்களைக் கண்டுபிடிப்பீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.