கண்டது
(மணப்பாக்கம் அருகே ஆட்டோ ஒன்றில்)
கடவுள் சோதிப்பது எல்லோரையும் அல்ல...
உன்னைப்போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டும்தான்.
ஜனமேஜயன் , பூந்தமல்லி
(திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஊரின் பெயர்)
கொக்காலடி
வி.வெங்கட்ராமன், செகந்திராபாத் -9
(வாவிபாளையத்தில் ஓர் இரு சக்கர வாகனத்தில்)
Son of Kisan
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
(மதுரையில் ஒரு முடிதிருத்தும் நிலையத்தின் பெயர்)
முடிகொண்டான் முடித்திருத்தும் நிலையம்.
கே.ராமநாதன், மதுரை.
கேட்டது
(சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள டீக்கடையில் இருவர்)
""நேத்து மெரீனா பீச்சில மீன் சாப்பிட்ட இரண்டு பேர் மண்டையப் போட்டுட்டாங்களாம்''
""அடடா... அப்புறம்?''
""அப்புறமென்ன? மீன் மண்டைய நாய் தூக்கிட்டுப் போயிருச்சு''
லாவண்யா, நாமக்கல்.
(தெங்கம்புதூர் ஜங்ஷனில் இரு பெரியவர்கள் )
""இப்ப உள்ள பசங்களுக்கு ரொம்பவேதான் வாய் நீளம்...''
""எப்படி சொல்றே?''
""என் பேரன் என்னை பார்த்து, யோவ் பெருசுனு கூப்பிடுறான்னா... பார்த்துக்கேயேன்''
""முகத்துக்கு நேர் இப்படியாவது கூப்பிடுறானே... அன்னிக்கு , உன் தாத்தா எங்கேனு ,அவன்கிட்ட கேட்டதுக்கு, அந்த கிழவன் இருக்கானோ...செத்தானோ.. யாருக்கு தெரியும்னு சொல்லிட்டு போறான்னா பார்த்துக்கேயேன் ''
மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை.
யோசிக்கிறாங்கப்பா!
அப்பாவின் வருமானத்தைச் சுலபமாக அனுபவிக்க
மகனுக்கு சுதந்திரம் கிடைக்கிறது;
ஆனால், அதே சுதந்திரம்
மகன் சம்பாதிக்கும் போது
அப்பாவுக்குக் கிடைப்பதில்லை.
த.வேல்முருகன், கொளத்தான்வலசு.
மைக்ரோ கதை
சிற்றூரில் இயங்கும் எங்கள் சின்ன கிராம வங்கிக்கு வந்த அந்த வாடிக்கையாளர் ஊழியர்களான எங்களைப் பார்த்து, ""என்ன எல்லோரும் அசட்டையாக இருக்கிறீர்கள்?'' என்றார். ஒரு வினாடி திகைத்துப் போனோம். அடுத்த நொடியில் புரிந்து கொண்டோம்.
நல்ல வெயில் காலமாயிருந்ததால் ஆண் ஊழியர்களாக மட்டுமே இருந்த நாங்கள் சட்டையைக் கழற்றிவிட்டுப் பனியனுடன் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அதைப் புரிந்துகொண்ட வினாடியில் வாடிக்கையாளருடன் சேர்ந்து நாங்களும் சிரித்தோம்.
இளங்காரி, கோவில்பட்டி.
எஸ்.எம்.எஸ்.
காயமே படாதவன்தான்
தழும்பைக் கண்டு நகைப்பான்.
நெ.இராமன், சென்னை-74.
அப்படீங்களா!
கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க இடைவெளிவிட்டு இருக்கச் சொல்கிறார்கள். முக கவசம் அணிந்து கொள்ளச் சொல்கிறார்கள். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்றாகக் கழுவச் சொல்கிறார்கள். டங்ய்க்ஹ இட்ண்ய்ஹ என்ற நிறுவனம் தயாரித்த மேல் கோட்டு போன்ற உடையை அணிந்து கொண்டால் இந்த மூன்றையும் ஒரே சமயத்தில் ஒருவர் செய்துவிட முடியும்.
கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட ஃப்ரேமில் பிவிசி ஃபிலிம் சுற்றப்பட்டுள்ள இந்த மேல் கோட்டு போன்ற உடையை அணிந்து கொண்டால், கரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்த வைரஸýம்,
கிருமியும் உங்களை அண்டாது.
இந்த உடைக்குப் பெயர் ஆங் ஹ ஆஹற்ம்ஹய் என்பதாகும். இந்த உடையின் பகுதிகளில் புற ஊதாக் கதிர்வீச்சு உள்ளது. அது இந்த உடையை வெப்பப்படுத்து
வதுடன், இந்த உடையைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கரோனா வைரஸ் போன்ற எந்த வைரûஸயும் கொன்றுவிடுகிறது.
தேவையில்லாத போது இந்த உடையை எளிதாக மடித்து வைத்துக் கொள்ளலாம்.
என்.ஜே., சென்னை-58.