தினமணி கதிர்

பேல்பூரி

22nd Sep 2019 05:20 PM

ADVERTISEMENT

கண்டது
* (கோவை - திருச்சி சாலையில் உள்ள ஒரு தேநீர்க் கடையின் பெயர்)
தேனமுது
எம்.சுப்பையா, கோவை.

* (மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் ஒன்றின் பெயர்)
மண் வாங்கி திடல்
வி.எஸ்.பாஸ்கரன், திருநன்றியூர்.

* (திருச்சி - லால்குடி டவுனில் கடைவீதியருகே உள்ள ஒரு தனியார் அலுவலகப் பலகையில்)
"டும் டும் டும்' திருமண தகவல் சேவை மையம்
ஆர்.தனம், திருச்சி -2

* (சென்னை பூந்தமல்லியில் ஆட்டோ ஒன்றில் அலைபேசி எண்ணுக்கு கீழ் கண்ட வாசகம்)
கால் செய்யுங்கள்...
கை கொடுக்க காத்திருக்கிறேன்
ஜனமேஜயன், சென்னை-56.

ADVERTISEMENT

எஸ்எம்எஸ்
விழிகள் இல்லாதவன் 
காதலில் விழுந்தாலும்... 
தொலைவது ஏனோ
தூக்கம்தான்.
ஜான் சைமன், திருநெல்வேலி.

கேட்டது
* (நெல்லை பேருந்து ஒன்றில் பயணியும் நடத்து நரும்)
"ஆசிரியர் குடியிருப்புக்கு ஒரு டிக்கெட் கொடுங்க''
"அங்கெல்லாம் இந்த பஸ் போகாது''
"டீச்சர்ஸ் காலனிக்குப் போகுமா?''
"போகும்... போகும்....''
க.சரவணகுமார், திருநெல்வேலி.

* (கன்னியாகுமரி பஜார் சாலையில் இரு கல்லூரி மாணவிகள்)
"நம்ம காலேஜ் ஜூனியர் பொண்ணுங்களை ரேகிங் செய்தும் ஒரு யூஸும் இல்லைடி''
"நீ சொன்னதை அவங்க செய்யலையா?''
"நான் சொன்னதைச் செஞ்சிட்டு கம்னு போறாங்கடி''
ஆர்.புனிதா, சோளிங்கர்.

யோசிக்கிறாங்கப்பா!
தண்ணீர்த் தட்டுப்பாடு தங்கு தடையில்லா
ஆழ்த்துளைக் கிணறுகளின் உறிஞ்சுதலால்...
பூக்கும் பூமிக்கும் உயிர் உண்டு.
உடலெங்கும் குத்தியெடுத்தபின்
நீர்க்குருதி வருமா? 
ரத்த தானம் மூன்று திங்களுக்கு ஒருமுறை...
தினந்தோறும் எடுத்தால் தானமாகுமா?
கே.கார்த்திக், தருமபுரி.

அப்படீங்களா!
உலக அளவில் 820 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது. அவர்களில் 60 சதவீதம் பேர் ஆசிய நாடுகளிலும் 30 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழ்வதாகத் தெரிவித்துள்ளது. 
ஆசியாவில் 513.9 மில்லியன் மக்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு பட்டினியால் வாடியிருக்கிறார்கள் என தெரிவித்துள்ள ஐ.நா.சபை, அதில் சத்துணவுக் குறைபாட்டால் தெற்காசிய பகுதிகளில் 11 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கிழக்காசிய பகுதிகளில் 2 மில்லியன் மக்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 21.9 சதவீதம் பேர் வளர்ச்சி குறைந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 
இதற்கு நேர்மாறாக உலகின் பிற பகுதிகளில் 338 மில்லியன் பள்ளி மாணவர்களின் வயதினர் அதிக உடல் எடையால் அவதிப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது. 
என்.ஜே., சென்னை-58.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT