22 செப்டம்பர் 2019

சிரி... சிரி... சிரி... சிரி...

DIN | Published: 19th May 2019 01:04 PM

• "அவர் ஒரு சைல்டு ஸ்பெஷலிஸ்ட்''
"நல்லா வைத்தியம் பார்ப்பாரா?''
"அட நீ வேற... அவருக்கு
ஒரு டஜன் பிள்ளைகள்''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

• "தலைவரே... கார் ஓட்டப் பழகுனீங்க... கார் வாங்கீட்டீங்க... அடுத்து?''
"விமானம் ஓட்டப் பழகப் போறேன்''
கு.அருணாசலம், தென்காசி.

• "அண்ணே நம்ம தொகுதியிலே...
யாருன்னே வருவா?''
"அதான் எலக்ஷன் முடிஞ்சி போச்சில்ல...
இனி யாருமே வரமாட்டாங்க?''
நந்தகுமார், ஏரல்.

• "நான் நிறையப் பேர் கிட்ட கடன் வாங்கியிருக்கேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?''
"அடிக்கடி சிம் கார்டை மாற்றிக்கிட்டே இருக்கீங்களே?''
எஸ்.மாரிமுத்து, சென்னை -64.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புரிதல்
 

 எளியமுறை... சிறந்த பயன்!
 

சிரி... சிரி... 

திரைக்கதிர்
 

மைக்ரோ கதை