மைக்ரோ கதை

பள்ளியில் ஆசிரியர் ஒருவர் எந்த மாணவரையும் குறைவாகப் பேசமாட்டார். படிக்காத மாணவனாக இருந்தாலும், கடுமையாகப் பேசமாட்டார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் வந்தது.
மைக்ரோ கதை

பள்ளியில் ஆசிரியர் ஒருவர் எந்த மாணவரையும் குறைவாகப் பேசமாட்டார். படிக்காத மாணவனாக இருந்தாலும், கடுமையாகப் பேசமாட்டார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் வந்தது. அவரிடம் படித்த, படித்துக் கொண்டிருக்கும் எல்லா மாணவர்களும் நெகிழ்ச்சியோடு கண்கலங்கி அவரிடம் பேசினார்கள்.
 "எப்படி சார் உங்க சர்வீஸ்ல எந்த மாணவனையும் குறை சொல்லாமல் இருந்தீங்க?'' என்று கேட்டார் ஒருவர்.
 ஆசிரியர் கூட்டம் நடந்த இடத்துக்கு எதிரே இருந்த தோப்பைக் காட்டி, "இங்கே இப்போது எல்லா மரங்களும் நன்றாக வளர்ந்திருக்கு. ஆனால் ஆரம்பத்துல மரங்களை நட்ட கொஞ்சம் நாளைக்கு சில மரங்கள் வளரவே இல்லை. சில மரங்கள் மட்டும் வளர்ந்துச்சு. நாம் என்ன செஞ்சோம்? வளராத மரத்தைப் பிடுங்கிப் போடலையே. அதுக்கும் நல்லா தண்ணி ஊத்தினோம். தேவையான உரத்தைப் போட்டோம். இப்ப எல்லா மரங்களைப் போல அதுவும் வளர்ந்திருச்சு. அதுமாதிரிதான் படிக்காத மாணவனைத் திட்டாமல் அவனுக்குத் தேவையானதை நான் சொல்லிக் கொடுத்தேன்'' என்றார்.
 வெ.ராம்குமார், சின்ன அல்லாபுரம், வேலூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com