பேல்பூரி

"சார்... 5 ரூபாய் சில்லறை இல்லை. இந்த லாலி பாப்-ஐ வெச்சுக்கோங்க''"ஏம்ப்பா... இவ்வளவு வயசுக்குப் பிறகு நான் 
பேல்பூரி

கண்டது
• (திருச்சி சப் ஜெயில் ரோட்டில் உள்ள ஓர் லாரி
புக்கிங் ஆபிஸின் பெயர்)
இராகு காலம்
இளவல் ஹரிஹரன், மதுரை.

• (திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சாலையில் உள்ள ஒரு
மருந்துக் கடையில்)
ஒரு வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கு 
மூன்றுமாதம் ஆகின்றது.
ஒரு வாடிக்கையாளரை இழப்பதற்கு 
மூன்று நிமிடம் ஆகின்றது.
தா.முருகேசன், திருத்துறைப்பூண்டி.

• (சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஒரு ஃபாஸ்ட்புட் கடையின் பெயர்)
சூனா தானா
சுத்தமான ஃபாஸ்ட் ஃபுட் கடை
தீ.அசோகன், சென்னை-19.

• (கருவேலன்குளத்தில் மெத்தைகள் ஏற்றி வந்த லாரியில்)
தூக்கம் பெட் கம்பெனி
எஸ்.கிருஷ்ணன், கருவேலன்குளம்.

யோசிக்கிறாங்கப்பா!
இவர் அவரைக் குறை சொன்னார்...
அவர் இவரைக் குறை சொன்னார்...
இருவரையும் 
மற்றவர்கள் குறை சொன்னார்கள்.
இரா.சிவானந்தம், கோவில்பட்டி. 

கேட்டது
• (தூத்துக்குடி பேக்கரி ஒன்றில் கடைக்காரரும்
வாடிக்கையாளரும்)
"சார்... 5 ரூபாய் சில்லறை இல்லை. இந்த லாலி பாப்-ஐ வெச்சுக்கோங்க''
"ஏம்ப்பா... இவ்வளவு வயசுக்குப் பிறகு நான் 
லாலி பாப்-ஐ வாயிலே வச்சுக்கிட்டு நடந்து போனா பாக்குறவங்க என்னைப் பத்தி என்ன நெனைப்பாங்க?''
க.சரவணகுமார், நெல்லை.

• (சென்னை அண்ணாசாலையில் ஒரு நடுத்தர வயது பிச்சைக்காரரும், பெரியவரும்)
"அய்யா தர்மம் பண்ணுங்க சாமி...''
"நான் உன்னையை விட வயசானவன். வேலைக்குப் போறேன். உனக்குக் கையும் காலும் நல்லாத்தானே இருக்கு. எங்கேயாவது வேலைக்குப் போ''
"பிச்சையெடுக்குறதும் ஒரு வேலைதான் சாமி''
கே.விஜயன், சென்னை-57

எஸ்எம்எஸ்
கவலையின் தொடக்கம்...
நம்பிக்கையின் முடிவு.
நம்பிக்கையின் தொடக்கம்...
கவலையின் முடிவு. 
நெ.இராமன், சென்னை-74

அப்படீங்களா!
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ளது அலகாய் டெக்னாலஜி நிறுவனம். இந்த நிறுவனம் பறக்கும் கார் ஒன்றைத் தயாரித்துள்ளது. திரவ ஹைட்ரஜனில் இயங்கும் இந்த பறக்கும் கார், மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்லக் கூடியது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 4 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த பறக்கும் காரில் சென்றுவிடலாம். ஒருமுறை திரவ ஹைட்ரஜனை நிரப்பிக் கொண்டால் 4 மணி நேரம் பயணம் செய்ய முடியும். இந்த திரவ ஹைட்ரஜன் கார், பேட்டரியால் இயங்கும் கார்களை விட 200 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது. 
இந்த பறக்கும் காரின் விலை ரூ.1 கோடியே 40 லட்சம். ஆண்டுக்கு 10 ஆயிரம் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது அலகாய் டெக்னாலஜி நிறுவனம். 
என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com