பேல்பூரி

பெரும்பாலான ரயில்கள் இக்காலத்திலும் டீசல் என்ஜின்களால் இயக்கப்படுகின்றன
பேல்பூரி

கண்டது
• (புதுச்சேரி சன்டே மார்க்கெட்டில் ஒரு துணிக்கடையின் பெயர்)
கடவுள் துணிக்கடை
பி.சி.ரகு, பள்ளிச்சேரி.

• (கோவை துடியலூரிலிருந்து சரவணம்பட்டி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஒரு கடையின் பெயர்)
எழுத்தாணி
எஸ்.டேனியல் ஜூலியட், 
கோயம்புத்தூர்-45.

• (சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே உள்ள செருப்புக்கடையில் கண்ட வாசகம்)
உலகத்திலேயே சிறந்த ஜோடி...
செருப்புதான்.
ஒன்றைப் பிரிந்தால் மற்றொன்றுக்கு வாழ வழி இல்லை.
செல்.பச்சமுத்து, சென்னை-24

யோசிக்கிறாங்கப்பா!
நமக்கு ஒருமுறை இழைக்கப்படும் அவமானத்தை 
உடனே மறக்காமல் அதையே நினைத்து நினைத்து 
வருந்துகிறபோதெல்லாம்...
நம்மை நாமே மீண்டும் மீண்டும்
அவமானப்படுத்திக் கொள்கிறோம்.
பர்வதவர்த்தினி, பம்மல்.

கேட்டது
• (திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட்
அருகில் இருவர்)
"நான் உப்பு விற்கப் போனா மழை பெய்யுது. மாவு விற்கப் போனா காத்தடிக்குது... என்ன செய்றது?''
"உப்பே விற்கப் போ... ஊர்ல மழையாவது பெய்யட்டும்''
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

* (சென்னை எழும்பூர் ரயில்வே
ஸ்டேஷனில் அப்பாவும், மகனும்)
"டேய்... ஓடுற ட்ரெயின்ல ஏறக் கூடாது''
"ஓடாத ட்ரெய்ன்ல ஏறுனா நாம
எப்படிப்பா ஊரு போய் சேர்றது?''
க.சரவணகுமார், நெல்லை.

எஸ்எம்எஸ்
சரியாகச் செய்வதை விட 
சரியானதைச் செய்வதே முக்கியம்
எம்.பி., விட்டுக்கட்டி.

அப்படீங்களா!
பெரும்பாலான ரயில்கள் இக்காலத்திலும் டீசல் என்ஜின்களால் இயக்கப்படுகின்றன. இதில் வெளிவரும் புகையால் சுற்றுச்சூழலுக்குக் கேடு. ரயில் பாதைகளை மின்சாரமயமாக்கினால் மின்சார ரயில்களை இயக்க முடியும். அவ்வாறு மின்மயமாக்கப்படாத சூழ்நிலையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள ரயில்தான் கோராடியா ஐலின்ட்.
ஹைட்ரஜனால் இயங்கக் கூடிய இந்த ரயிலில் இருந்து வெளிவருபவை நீராவியும், தண்ணீரும்தான். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. 
ஒருமுறை ரயிலில் உள்ள ஹைட்ரஜன் டேங்கை நிரப்பிவிட்டால் 1000 கி.மீ. பயணம் செய்யலாம். 
தற்போது ஜெர்மனியில் குஸ்ஹாவென் நகரத்துக்கும் பிரிமெர்ஹாவெஸ் நகருக்கும் இடையே இயக்கப்படுகிற இந்த ஹைட்ரஜன் ரயிலில் எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றைக் கலந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரத்தை அயன் லித்தியம் பேட்டரிகளில் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.
பிரிட்டன், நெதர்லாண்ட், டென்மார்க், நார்வே, இத்தாலி , கனடா ஆகிய நாடுகளில் இந்த ஹைட்ரஜன் ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com