செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

குறுந்தகவல்கள்

DIN | Published: 16th June 2019 01:47 PM

கலைவாணர்!

கலைவாணர் என்ற பட்டத்தை என்.எஸ். கிருஷ்ணனுக்கு அளித்தவர் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார்.
நெ.இராமன், சென்னை. 

கிளை நூல்கள்
மகாபாரதத்தைப் பின்பற்றி எழுதப்பட்ட கிளை நூல்கள் "பாஞ்சாலி சபதம்', "மாரிவாயில்', "கண்ணன் தூது', "துகிலுரி காதை', "திரௌபதி கண்ணி', "நளவெண்பா', "நைடதம்', "அல்லி அரசானி மாலை', "பவளக் கொடி மாலை', "புலந்திரன் தூது', "ஏணியேற்றம்', "கிருஷ்ணன் தூது', "விராட பர்வம்', "ஆதி பர்வம்', "அல்லி நேரம்', "திரௌபதி குறவஞ்சி' போன்றவையாகும்.
பி.கோபி, 
கிருஷ்ணகிரி. 

லட்டோ லட்டு!
1931-ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டு பிரசாதத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் என்பவர்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புரிதல்
 

 எளியமுறை... சிறந்த பயன்!
 

சிரி... சிரி... 

திரைக்கதிர்
 

மைக்ரோ கதை