வேல்பூரி

கிடைச்சா உடைச்சிடுறாங்க,கிடைக்கலைன்னா- உடைஞ்சிடுறாங்க...என்னத்தைச் சொல்ல?
வேல்பூரி

கண்டது


(கும்பகோணத்தில் இயற்கை உரமிட்டு உற்பத்தி  செய்யப்பட்ட  தானியங்களை விற்பனை செய்யும்  கடையின் பெயர்)

வயல்

வீர.செல்வம், பந்தநல்லூர்.

(திருவைக்காவூர் சிவன் கோயில் வாசலருகே வேனில் கண்ட வாசகம்)


லைஃபைத் தேடும் முன்
வொய்ஃபைத் தேடாதே!

கீதா முருகானந்தம், கும்பகோணம்.

(அதிராம்பட்டினத்தில் ஒரு  மளிகைக்கடையின் பெயர்)

மக்கள் மளிகைக் கடை


சாகுல்,  அதிராம்பட்டினம்.


யோசிக்கிறாங்கப்பா!

கிடைச்சா உடைச்சிடுறாங்க,
கிடைக்கலைன்னா- உடைஞ்சிடுறாங்க...
என்னத்தைச் சொல்ல?

கா.அஞ்சம்மாள்,  பி.வி.பட்டினம்.


கேட்டது


(நாமக்கல்லில் ஒரு தேநீர்க் கடையில் இளைஞர்கள் இருவர்)


""மச்சி டி.வி.யிலே எதைப் பார்ப்பே?''
""ஸ்கிரீனைத்தான்''
""அதில்லே மச்சி...  எதைப் போடுவே?''
""முதல்லே சுவிட்சை''
""போடா இவனே...''

யூ.பைஸ் அஹமத், நாமக்கல்.

(மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் தாயும், 10 வயதுச் சிறுமியும்)

தாய்: ஷம்மு... நல்லாதானே நடந்து வந்தே.... திடீர்ன்னு வாத்து மாதிரி ஏன் நடக்க ஆரம்பிச்சிட்டே... என்னாச்சு?
மகள்: இப்ப நீதானம்மா "டக்'குன்னு எட்டுவச்சி நடந்துவான்னு சொன்னே... அதனாலே அப்படி நடக்குறேன்.

கே.திருமாறன், சித்தாக்கூர்.


மைக்ரோ கதை


அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர்ந்திருந்தாள் ராதா.
"அக்கடா'வென சோபாவில் சரிந்தவளின் காதில் சமையலறைக்குள்ளிருந்து வந்த பேச்சுக் குரல்கள் கேட்டன.
""ஏன்டி இதுக்கெல்லாம் அக்கா வரணுமா உனக்கு? உன்னால செய்ய முடியாதா?'' -அம்மா.
""இல்லம்மா இதுக்கெல்லாம்  அக்காதான் கரெக்ட்.   அக்கா ரொம்பவும் கை ராசிக்காரி''
""சரி... அக்கா வரட்டும்.  வர்ற நேரம்தான்''
சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா ராதாவைப் பார்த்து, ""வந்துட்டியா? உன்னைத்தான் தேடிக்கிட்டிருந்தோம்'' என்றாள்.
""எதுக்காக?''
""நீ ரொம்ப கைராசின்னு உன் தங்கச்சி சொல்றா?''
""எதுக்கும்மா?''
""போன தடவை எலிப்பொறியிலே தேங்காய் பத்தைய நீ வெச்சதாலே... பெரிய எலி ஒன்னு மாட்டிக்கிடுச்சாம். அதனாலே இந்தத் தடவையும் நீ தான் வைக்கணுமாம்''

கே.நாகராஜ், பொள்ளாச்சி.

எஸ்.எம்.எஸ்.


அடுத்தவனுக்குக் கிடைத்துவிட்டதே என்று
மனிதன் பொறாமைப்படாத ஒரே விஷயம்...
மரணம்.

மங்கை கவுதம், பாளையங்கோட்டை.


அப்படீங்களா!


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தேசிய அளவிலான ஒரு போட்டி நடந்தது.  போனி பிளான்ட்ஸ் என்ற மாபெரும் காய்கறி உற்பத்தி, விற்பனை நிலையம்  வித்தியாசமான முட்டைகோஸ்  வளர்க்கும் அந்தப் போட்டியை நடத்தியது.  அதில்  32 ஆயிரம் சிறுவர், சிறுமிகள் பங்கு கொண்டார்கள்.  அந்தப் போட்டியில்  பிட்ஸ்பர்க்கில் உள்ள  பீபிள்ஸ் ஆரம்பப்பள்ளியில் பயிலும்  9 வயதுடைய சிறுமி  லில்லி ரைஸ்  முதல் பரிசை வென்றார்.  அவருக்கு அந்த நிறுவனம்  1000 டாலர் மதிப்பிலான சேமிப்பு பத்திரத்தை அவருடைய எதிர்காலப் படிப்புக்கு உதவும் வகையில் வழங்கியிருக்கிறது.  லில்லி ரைஸ்  வளர்த்த முட்டைகோஸின் எடை  14.5 கிலோ.

என்.ஜே., சென்னை-116.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com