தினமணி கதிர்

மைக்ரோ கதை

11th Aug 2019 01:21 PM

ADVERTISEMENT

செல்வந்தர் ஒருவர் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. விருந்தைத் தொடங்க நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. பிரபலமான ஓர் அரசியல் பிரமுகர் ஒருவரின் வருகைக்காக எல்லாரும் காத்திருந்தார்கள். அப்போது விருந்துக்கு வந்திருந்த ஒருவருக்கு ரொம்ப பசி. அவர் பந்தியில் அமர்ந்து தனக்கு உணவு தரும்படி கேட்டுக் கொண்டார். அவரைப் போலவே நிறையப் பேரும் அமர்ந்து உணவு கேட்கவே, உணவு பரிமாறப்பட்டது. எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் செல்வந்தருக்கு கோபம் வந்துவிட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரிடம், "சாப்பிடுவதில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்?'' என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார்: "பசிக்கும்போது சாப்பிடுபவன் மனிதன். கிடைக்கும்போது சாப்பிடுவது மிருகம்''
 செல்வந்தர் எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றார்.
 பே.சண்முகம், செங்கோட்டை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT